பிரதமர் மோடியைப் பின்பற்றும் அண்ணாமலை.. கோவில் கோவிலாக சென்று.. சாமி கும்பிடுகிறார்!

Jun 01, 2024,12:41 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியைப் போலவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தில் உள்ள கோவில்களுகக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.


லோக்சபா தேர்தல் இன்றோடு முடிவடைகிறது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் குறித்த முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.




ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 13 தொகுதிகள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், சத்தீஸ்கரில் ஒரு  தொகுதி, ஒடிசா ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் நான்கு தொகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பிரதமர் மோடியை போலவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள கேது ஸ்தலம் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 


பிரதமர் மோடியின் வாரணாசி உள்பட.. 57 தொகுதிகளில்.. விறுவிறு இறுதிக் கட்ட வாக்குப் பதிவு!



புதுச்சேரியில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு சென்ற அண்ணாமலை 108 சிதறு தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்ததுடன், அங்கு சிறிது நேரம் தியானமும் செய்துள்ளார். 


அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வழிபாடு செய்துள்ளார். இவ்வாறாக, தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.  பிரதமர் மோடி பாணியை பின்பற்றி பாஜக  மாநிலத்தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்து வருவது, தேர்தலில் வெற்றி பெற வேண்டி தான் இந்த சாமி தரிசனங்கள் எல்லாம் நடப்பதாக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக.,வில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்