சென்னை: தங்கம் விலை நேற்று போலவே இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய ஆபரண தங்கம் விலை கிராமிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.6,430திற்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்தே தான் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. அது இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்திருந்த நிலையில் நேற்றும் இன்று உயர்ந்துள்ளது. இந்த உயர்வால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆடி பெருக்கிற்கு இன்னும் ஒரு நாள் மட்டும் உள்ள நிலையில் நகை விலை உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களை கவலை அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து 6,430 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,43,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,015 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,120 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,150 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,01,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,036க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,051க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,036க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,036க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 0.70 காசுகள் அதிகரித்து சவரனுக்கு ரூ.91.70க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 733.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.917 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,170 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.700 ஆக உள்ளது.
கோர வெள்ளம்.. "உதவி தேவையில்லை.. இந்தியா, சீனா, அமெரிக்கா இழப்பீடு தர வேண்டும்".. நேபாளம்
ஒரே நாளில் ஓட்டுநர் உரிமம், வழக்குகள் வாபஸ்...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புகள்
வேளாங்கண்ணி கோயிலில் சாதியம்.. அமைச்சர் மரிய வில்சன் அதை மாற்றுவாரா? .. ரவிக்குமார்
ரஜினியின் 'ஜெயிலர் 2'ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
நேபாளம் வெள்ளம்.. வாழத்தான் பிறந்தோம் என்று நேபாளம் வந்தோம்!
சிந்தனைச் சிதறல்.. மாறுவார்கள் என எதிர்பார்ப்பதை விட.. எதிர்பார்ப்பை மாற்றிக் கொள்வோம்!
மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் டூ நிமிஷாம்பாள்.. மக்களின் மனம்!
கோகுலாஷ்டமி .. பகவான் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் அற்புத பண்டிகை!
திருச்சி சிவாவுக்கு கலைஞர் விருது.. திமுக முப்பெரும் விருதுகள் அறிவிப்பு
{{comments.comment}}