அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகை நடத்திய ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மீது ஒரு கும்பல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. இந்த திடீர் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கிறார்கள். ஆப்பிரிக்க நாடுகள், ஆப்கானிஸ்தான், முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இங்கு படிக்கிறார்கள். இவர்களில் முஸ்லீம் மாணவர்களும் கணிசமாக உள்ளனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளது. இது ரமதான் மாதம் என்பதால் இரவில் செய்யும் தொழுகையை இந்த மாணவர்கள் விடுதிக்குள் செய்துள்ளனர். அங்கு தனியாக மசூதி இல்லை என்பதால் விடுதிக்குள்ளேயே தாங்கள் தொழுகை நடத்தியதாக மாணவர்கள் கூறியும் கத்தி, கட்டைகளால் தங்களை அந்தக் கும்பல் தாக்கியதாகவும், அறைகளை அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடியதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மாணவர்களின் லேப்டாப்புகள், பைக்குகள், மொபைல் போன்கள் என ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளன. குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால் குஜராத் பாஜக அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இப்படி நடந்திருப்பதால் இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கொள்ளும் என்ற அச்சமும் பாஜகவுக்கு வந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் ஆப்கானிஸ்தான், இலங்கை, துர்க்மேனிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு மாணவரும், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 2 பேரும் காயமடைந்துள்ளனர். சம்பவத்தின்போது போலீஸார் உடனே வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கும்பல் நுழைந்து தாக்குதல் நடத்தி போன பிறகுதான் போலீஸார் வந்தனராம்.
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!
பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!