மயிலாடுதுறையை மிரட்டிய சிறுத்தை.. அரியலூரில் இருப்பதாக..  வனத்துறையினர் எச்சரிக்கை!

Apr 12, 2024,12:33 PM IST

அரியலூர்: மயிலாடுதுறையில் மக்களை மிரட்டிய சிறுத்தையும் அரியலூர் மாவட்டம் செந்துறையில்  நடமாடும் சிறுத்தையும் ஒன்று என வனத்துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


கடந்த இரண்டாம் தேதி மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக சிசிடிவி கேமரா வெளிவந்தது. இதனை அடுத்து பல்வேறு கட்டங்களாக சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வந்தது. இதனை அடுத்து  மயிலாடுதுறையிலிருந்து சிறுத்தை தஞ்சை மாவட்டத்தை நோக்கி இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற கோணத்தில் வனத்துறையினர் 25 கேமராக்கள், கூண்டுகள், என பல பகுதிகளில் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். 




ஆனாலும் சிறுத்தை பிடிபடவில்லை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொள்ளிடப் பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.


இந்த நிலையில் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை தற்போது அரியலூர் செந்துறையை சுற்றி உள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ளதாக வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஏனெனில் செந்துறை அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 9 மணி அளவில் சிறுத்தை வேலியை தாண்டி சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் வீட்டின் அருகே பார்த்ததாகவும், அதே நேரத்தில் நேற்று இரவு அரியலூர் ஆற்றுக்கால் பகுதிகளில் இருந்த காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டது.


இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கியால் தெரிவித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியும் வருகின்றனர். மேலும் சுண்ணாம்புக்கல் சுரங்க அடர் வனப் பகுதிகளில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் சேர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தையும் செந்தூரில் உள்ள சிறுத்தையும் ஒன்றாக இருக்குமா என்பது உறுதி செய்ய முடியவில்லை.

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையும், இதுவும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. கால் தடங்களை ஆய்வு செய்த பின்னரே இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு சிறுத்தைகளாய் என்பதை உறுதி செய்ய முடியும் என வனத்துறையினர் நேற்று கூறிவந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் உள்ள சிறுத்தை இடம்பெயர்ந்து இன்று அரியலூர் செந்துறை பகுதியில் வந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.


மயிலாடுதுறையில் உள்ள சிறுத்தை ஏற்கனவே கொள்ளிடப் பகுதி காடுகளில் வசித்திருக்கலாம். அது தப்பித்தவறி வழி தெரியாமல் மயிலாடுதுறை பக்கம் வந்திருக்கலாம்.

மீண்டும் அது இடத்திற்கே செல்ல இது போன்று இடம்பெயர்வு இருக்கலாம் எனவும் வனத்துறையினர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்