அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Dec 18, 2024,07:00 PM IST

சென்னை: டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாஜக அல்லாத மற்ற எந்த கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி என்பது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.


பாஜகவுடன் கூட்டணி கிடையாது




 2026ல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் கூறிவிட்டார். 2026 தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு கூட வெற்றி பெறும். அதிமுக என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கம். யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கட்சியின் பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவும் தான் தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.டிடிவி தினகரன் தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவிடம் சரணடைந்து விட்டார்.


அம்பேத்கர் புகழ் இந்தியா முழுவதும் போற்றப்பட வேண்டுமே தவிர, அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக்கூடாது. அம்பேத்கா் குறித்து அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள்.


தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள்


தமிழகத்தில் தற்போது நிறைய பிரச்சனைகள் உள்ளன.  நீட் பயம், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதது, அரசு ஊழியர்கள் போராட்டம் என ஒட்டுமொத்தமாக தெனாலி படம் போல பயம், பயம் என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் பயமே உருவானவராக உள்ளார்.யார் பயந்து போயிருக்கின்றனர் என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். 


பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி அப்பாயிமென்ட் கேட்டால் உடனே கிடைக்கிறது. அவர்கள் பாஜகவின் செல்லக்குழந்தைகள் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

news

ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?

news

தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி

news

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

news

ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்

news

ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!

news

ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!

news

எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!

news

பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!

அதிகம் பார்க்கும் செய்திகள்