SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

Nov 03, 2025,05:37 PM IST

சென்னை: முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று  திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் SIR பணிகளை மேற்கொள்ளப் போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவத்தில், திமுக சார்பில்  சென்னை தி.நகரில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், சார் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முதல்வருக்கு SIR என்றாலே அலர்ஜிதான். மக்களை திசைதிருப்பவே திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம். SIR வேண்டாம் என்று  திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என உச்ச நீதிமன்றம் செல்வோம். இறந்தவர்களுக்கு வாக்குரிமை இருந்து, இருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லாதது ஜனநாயக கேலிக்கூத்து. அதை மாற்றுவதற்காகவே SIR நாங்கள் வரவேற்கிறோம்.


நேர்மையாக, வெமிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏன் இவர்கள் பயப்பட வேண்டும். பீகாரை தமிழ்நாட்டுடன் ஒப்பிட வேண்டாம். இறந்தவர்களுக்கு வாக்கு இருக்கிறது, உயிருடன் இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. இதை விட வேறு ஒன்று ஜனநாயகத்திற்கு கேலிக்கூத்து இல்லை. இதனால் தான் நாங்கள் SIRயை நாங்கள் வரவேற்றோம்  என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்தக் காதலை மட்டும்...கட்டுப்படுத்த முடியலையே!

news

உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

அதிகம் பார்க்கும் செய்திகள்