சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்க கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இத்கிடையே, பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். விசாரணையை சந்திக்க வஏண்டும் என்று அவரது சித்தப்பாவும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவெகெளடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ஹசன் தொகுதி எம்.பியாகவும் இருக்கிறார். இவர் பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வக்கிரமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது ஜெர்மனியில் இருப்பதாக தெரிகிறது. இவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுக்கப்பட்டது. பிரஜ்வலை கைது செய்ய ஏற்கனவே எஸ் ஐ டி அதிகாரிகள் நீதிமன்றத்தில் அரெஸ்ட் வாரண்ட்டும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை உடனே முடக்க உத்தரவு கோரி வெளியுறவு துறைக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சித்தப்பா குமாரசாமி கோரிக்கை
இதற்கிடையே பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று அவரது சித்தப்பா எச்டி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா முதலில் நாடு திரும்ப வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். எனது தந்தைதான் இந்த கோரிக்கையை விடுக்க விரும்பினார். அவருக்குப் பதில் நான் கோரிக்கை விடுக்கிறேன். உனது (பிரஜ்வல்) வளர்ச்சிக்காக தனது அரசியலையே அர்ப்பணித்துள்ளார் தாத்தா. அவர் மீதும், கட்சி மீதும் மரியாதை வைத்திருக்கும் நீ இப்படி தலைமறைவாக இருப்பது சரியாக இருக்காது. 24 மணி நேரத்திலோ அல்லது 48 மணி நேரத்திலோ நாடு திரும்பு என்று தனது அண்ணன் மகனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் குமாரசாமி.
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}