சென்னை: திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று வெளியாகி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருப்பமனு அளிக்காத பொன்முடி :
திமுகவில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்ப மனுக்கள் பெறும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கட்சியின் முக்கியப் புள்ளிகள் அனைவரும் தங்களது தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தனர். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளிக்கவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அவர் மீது நிலவி வரும் சட்டச் சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக, அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின் பெயரிலேயே அவர் இந்த முடிவை எடுத்தாரா அல்லது சொந்த காரணங்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
களமிறங்கும் மகன் கௌதம சிகாமணி?

தந்தை போட்டியிடாத பட்சத்தில், அந்த இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பொன்முடியின் மகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளார். கௌதம சிகாமணி ஏற்கனவே தனது விருப்பமனுவை உரிய முறையில் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். பொன்முடிக்குப் பதிலாக அவரது மகனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், விழுப்புரம் பகுதியில் திமுகவின் செல்வாக்கை நிலைநிறுத்த முடியும் என்று கட்சித் தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
விழுப்புரம் அரசியல் சூழல் :
பொன்முடி கடந்த பல தசாப்தங்களாக விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வருகிறார். கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது அந்த மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இருப்பினும், கௌதம சிகாமணி ஏற்கனவே எம்.பி-யாக இருந்த அனுபவம் கொண்டவர் என்பதால், இளைஞர்கள் மற்றும் தொகுதி மக்களின் ஆதரவைத் திரட்ட முடியும் என திமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பொன்முடி நேரடித் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், கட்சிப் பணிகளிலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது, இந்த வேட்பாளர் மாற்றம் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையில், இந்தத் தகவல் தொண்டர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
"அன்னை மொழி அதுவே நம் விழி"
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
Short Story: ருத்ர தாண்டவம்!
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}