பெங்களூரு: கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.
"அப்பா இறந்து விட்டார்" என்று அவரது மகன் சாண்டி உம்மன் தனது பேஸ்புக்கில் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இன்று அதிகாலை உம்மன் சாண்டி மரணமடைந்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான உம்மன் சாண்டி, இரண்டு முறை கேரள முதல்வராக இருந்தவர். 2004ம் ஆண்டு முதல் 2006 வரை முதல் முறையும், 2011 முதல் 16 முதல் இரண்டாவது முறையும் முதல்வராக இருந்தவர் உம்மன் சாண்டி. கோட்டயம் மாவட்டம் புதுப்புள்ளி சட்டசபைத் தொகுதியிலிருந்து கிட்டத்தட்ட 50 வருட காலம் எம்எல்ஏவாக இருந்தவர் உம்மன் சாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலமாக அவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் சிகிச்சைக்காக பெங்களூரில் தங்கியிருந்தார். உம்மன் சாண்டி மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒரே ஆண்டில்தான் நானும், உம்மன் சாண்டியும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோம். மாணவர்களாக இருந்தபோது ஒரே மேடையில்தான் இருவரது அரசியலும் தொடங்கியது. ஒரே காலகட்டத்தில் நாங்கள் பொது வாழ்வை ஆரம்பித்தோம். அவருக்கு பிரியாவிடை கொடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. உம்மன் சாண்டி சிறந்த நிர்வாகி. மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}