நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பொங்கிய முன்னாள் அமைச்சர்

Apr 17, 2025,11:57 AM IST

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்றே உரிய விளக்கத்தை அளித்துவிட்டார். தினமும் மக்கள் பாதிக்கப்படுகின்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதையெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கியதும் பல்வேறு முக்கிய பிரச்சினைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சபாநாயகரை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியேறினார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது, அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி என்று தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களுக்கு எரிச்சல். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியா? வலு இல்லாத கூட்டணியா என்பது தேர்தலின் போது தான் தெரியும் எனக் கூறியிருந்தார். 


இந்த நிலையில் இன்று மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,




அதிமுக மற்றும் பாஜக கூட்டணி குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் கழகத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றே உரிய விளக்கத்தை அளித்து விட்டார். எவ்வளவோ சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் இருக்கிறது; அதேபோன்று தினமும் மக்கள் பாதிக்கப்படுகின்ற எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது. நீங்கள் அதெல்லாம் கேள்வி கேட்க மாட்டீர்கள். திமுக நேற்று மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் அதன் அடிப்படையில் 17 வருஷம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எவ்வளவு விஷயங்கள் செய்திருக்கலாம். அதாவது கல்வியை  மாநில பட்டியலில் இருந்து பொது  பட்டியலுக்கு கொண்டு போய் அதை திருப்பி மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். 


ஒரு நிதி தன்னாட்சியை மேம்படுத்துவதற்கு அந்தத் திட்டங்களை அப்பவே அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்திருக்கலாம். இதுபோல எவ்வளவு விஷயங்கள் சொல்லலாம். கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு, அதேபோன்று காவிரி நதிநீர், இப்படி பல்வேறு விஷயங்களில் இன்று கோட்டை விட்டுவிட்டு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர் தான் ஒரு பாதுகாவலர் என்பது போல் பிம்பத்தை ஏற்படுத்துவதற்குரிய தீர்மானமாகத்தான் கையாளக்கூடிய திராவிட மாடல் தீர்மானமாக கொண்டு வந்திருக்கிறார்கள். 


இன்னிக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது‌. அந்த அளவுக்கு மக்கள் வாழ கூட முடியாத ஒரு சூழ்நிலை. அதாவது கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, இது போன்ற சம்பவங்கள் தென் மாவட்டங்களில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இதையெல்லாம் கேள்வியாக யாரும் கேட்காதீர்கள். பாஜகவை பொறுத்தவரை அதன் நிலைப்பாடு என்ன என்பதை நமது பொதுச் செயலாளர் தெளிவாக சொல்லிவிட்டார் என கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்