கற்பனை உலகில் இருக்கிறார் ஆளுநர் ஆர். என். ரவி.. Fact என்னென்னா.. ப.சிதம்பரம் கொடுத்த விளக்கம்!

Oct 19, 2024,06:15 PM IST

சென்னை:   இந்தியாவின் 28 மாநிலங்களில்  27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப் படுவதாக தமிழ்நாடு ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் கற்பனை உலகத்தில் இருக்கிறார் என்று பணிவுடன் சொல்ல விரும்புகிறேன் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


சென்னையில் டிடி தமிழ் டிவி அலுவலகத்தில் நடந்த இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். குறிப்பாக இந்தி குறித்தும், தமிழ்நாடு குறித்தும் அவர் பேசினார். அவரது பேச்சு குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தற்போது ஒரு விளக்கம் கொடுத்து பதிவிட்டுள்ளார். அவரது கருத்து:


இந்தி மாநிலங்கள் பலவற்றில் ஆங்கிலம் கிடையாது




பல இந்தி பேசும் மாநிலங்களில் -- குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்க்கண்ட் -- பல அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை, ஆங்கில வகுப்புகளை நடத்துவதில்லை, அப்படி நடந்தாலும் வகுப்புகளில் மொழிப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை


பல்லாயிரம் ஆங்கிலம் கற்ற மாணாக்கர்கள் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேச அல்லது எழுத இயலாதவர்கள் என்பதை நான் நேரடியாக அறிவேன் 


அங்கு மும்மொழித் திட்டம் செயல்பாட்டில் இல்லை.  ஆழமாகப் பார்த்தால், அங்கு ஒரு மொழித் திட்டம் தான் செயல் படுத்தப்படுகிறது


2வது மொழியாக தென் மாநில மொழிகள் இல்லை


இரண்டாவது மொழி என்ற பெயரில் இந்தி மொழிக்கு நெருங்கிய தொடர்புள்ள சமஸ்கிரதம், பஞ்சாபி, போஜ்புரி போன்ற மொழிகள் ஒப்புக்காக 'கற்பிக்கப்படுகிறது'


தென் மாநில மொழிகள் -- தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் -- 95 சதவீதப் பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதில்லை, அதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதே உண்மை


தமிழ்நாட்டில் இந்தி கற்க தடையே கிடையாது


தமிழ் நாட்டில் மாநில அரசுப் பள்ளிகளைத் தவிர தனியார் பள்ளிகள், CBSE, ICSE பள்ளிகள் மற்றும் மத்திய அரசு நடத்தும் KV பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்பது எல்லோரும் அறிந்த செய்தி . தமிழ்நாட்டில் இந்தி மொழியைக் கற்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு எந்தத் தடையும் கிடையாது. 


தட்சிண பாரத இந்தி பிரசார சபையின் பல நிலைத் தேர்வுகளை ஆண்டு தோறும் தமிழ்நாட்டில் பல்லாயிரம் மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெறுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.


மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உண்மைச் செய்திகளின் அடிப்படையில் அரசின் கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்