புற்றுநோய்.. உருகுவேயைச் சேர்ந்த முன்னாள் மிஸ் வேர்ல்ட் மரணம்!

Oct 16, 2023,01:09 PM IST
மான்டிவீடியோ:  முன்னாள் உலக அழகி ஷெரிகா டி அர்மாஸ் தனது 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். 

உருகுவே நாட்டை சேர்ந்த இவர் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதில் புற்றுநோய்க்கு அர்மாஸ் பலியாகியிருப்பது பலரையும் அதிர வைத்துள்ளது.

ஷெரிகா டி அர்மாஸ்சுக்கு புற்று நோய் கண்டறியப்பட்டதில் இருந்து தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்தார். சிகிச்சை எதுவும் பலன் அளிக்காத நிலையில் அவர் மரணித்துள்ளார்.



இதுபற்றி அவருடைய சகோதரி மெய்க் டி அர்மாஸ் கூறுகையில், "சிறிய சகோதரி, உயரமாக பறக்கவும்" என  இரங்கல் தெரிவித்துள்ளார். ஷெரிகா டி அர்மாஸின் இறப்பிற்கு உருகுவே நாட்டு மக்கள் மற்றும் உருகுவே நாட்டு அழகிகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ  விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களில் மிக அழகிய பெண்களில் ஒருவர் ஷெரிகா டி அர்மாஸ் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்