வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜிம்மி கார்டர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100.
ஜார்ஜியா மாகாணத்தின் சாதாரண கிராமப் பகுதியில் பிறந்து வளர்நதவரான ஜிம்மி கார்டர், அதிபர் பதவி வரைக்கும் உயர்ந்தவர். அமைதிக்கான நோபல் பரிசும் வென்றவர். உலக நாடுகள் பலவற்றில் சமாதானம் ஏற்பட தூதுவராக சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர். பலரது மனம் கவர்ந்த ஜிம்மி கார்டர் 1977 முதல் 1981ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தார்.

அமெரிக்காவின் 39 ஆவது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்டர். அப்போதைய காலகட்டத்தில் மனித உரிமை மற்றும் சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர். பதவிக்காலம் முடிந்த பிறகு 2002 ஆம் ஆண்டு இவரின் சிறந்த மனிதாபிமானத்தை பாராட்டி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
100 வயதான அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் அவரது மரணம் வந்து சேர்ந்துள்ளது. ஜிம்மி கார்டர் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர்களிலேயே நீண்ட நாள் வாழ்ந்த தலைவர் என்ற பெருமையை் பெற்றவர் ஜிம்மி கார்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}