பிரிட்டோரியா: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் உலகம் ஒரு ஒரு அருமையான கிரிக்கெட்டரை இழந்துள்ளது. முன்னாள் ஆல் ரவுண்டர், கிரிக்கெட் கோச், ஐசிசி ரெப்ரீ என பல வகையிலும் கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த மைக் புராக்டர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 77.
தென் ஆப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த கிரிக்கெட் ஆளுமைகளில் ஒருவர் மைக் புராக்டர். அவர் கிரிக்கெட் ஆடியது குறுகிய காலமே. ஆனாலும் மிகச் சிறந்த டெஸ்ட் வீரராக விளங்கியவர். இனவெறி ஆட்சி நடந்து வந்த காலகட்டத்தில், 1970 முதல் 80கள் வரை தென் ஆப்பிரிக்கா மீது பல்வேறு தடைகள் இருந்ததால் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட அந்த அணிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் புராக்டரும் ஒருவர்.

இவர் ஆடியது மொத்தமே 7 டெஸ்ட் போட்டிகளில்தான். அத்தனையும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது மட்டுமே. அவரது பந்து வீச்சு சராசரி 15.02 ஆகும். 7 போட்டிகளில் விளையாடிய அவர் எடுத்த விக்கெட்கள் 41. மிகச் சிறப்பான பந்து வீச்சாளர் புராக்டர். அவர் கைகளிலிருந்து பந்து வெளியேறும் விதமே அலாதியானது, அதிரடியானது. இவர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட்டில் கூட தென் ஆப்பிரிக்கா தோற்றதில்லை. ஆறில் வென்று, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.
பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தியவர் புராக்டர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 1969-70 போட்டித் தொடரில் 4-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதில் புராக்டரும் அபாரமான பங்களிப்பைக் கொடுத்திருந்தார். 1970ம் ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இவரைத் தேர்வு செய்து கெளரவப்படுத்தியிருந்தது.
தென் ஆப்பிரிக்கா மீதான கிரிக்கெட் தடை நீங்கிய பிறகு அந்த அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் புராக்டர். 1992 உலகக் கோப்பைப் போட்டித் தொடரின்போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். அந்த தொடரில் அரை இறுதி வரை தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. அதன் பின்னர் 2002ம் ஆண்டு முதல் 2008 வரை ஐசிசி நடுவராக செயல்பட்டார்.
சமீபத்தில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சனிக்கிழமையன்று இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையின்போது ஏற்பட்ட சிக்கலால் அவர் மரணத்தை சந்திக்க நேர்ந்ததாக அவரது மனைவி மேரினா தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}