திருவனந்தபுரம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டவரான பாத்திமா பீவி வயோதிகம் காரணமாக காலமானார். அவருக்கு வயது 96.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. தமிழ் ராவுத்தர் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். 1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்த பாத்திமா பீவி திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர். அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு வக்கீலாக தனது பணியை தொடங்கினார். வக்கீல் பதவியிலிருந்து பிறகு முன்சிப்பாக உயர்ந்தார். துணை நீதிபதி, மாவட்ட மேஜிஸ்ட்ரேட் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதியாக பதவி வகித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார். பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியானார். 1992 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக செயல்பட்டார். அப்போதுதான் மறைந்த கருணாநிதியின் விருப்பத்தின் பேரில் தமிழ்நாடு ஆளுநராக பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு அரசுக்கும், பாத்திமா பீவிக்கும் இடையே நல்லுறவு நீடித்தது. இருப்பினும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாலிஹு என்பவரை பாத்திமா பீவி நியமித்தது தொடர்பாக அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே கடும் பூசல் வெடித்தது. இந்த விவகாரத்தால் கருணாநிதி, பாத்திமா பீவி இடையிலான நல்லுறவும் முறிந்து போனது.

தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விடை பெற்று பாத்திமா பீவி செல்லும்போது, தமிழ்நாட்டை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறி விட்டுப் போனார் என்பது குறிப்பிடத்தக்கது. 1997ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராக செயல்பட்டார் பாத்திமா பீவி.
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, உச்சநீதிமன்றத்தின் முதல் இஸ்லாமிய பெண் நீதிபதி, ஆசிய நாடுகளின் உச்சநீதிமன்றம் ஒன்றில் நீதிபதவியாக பதவி வகித்த முதல் பெண் என்று பல பெருமைகள் பாத்திமா பீவிக்கு உண்டு. வயோதிகம் காரணமாக இன்று இயற்கை எய்தியுள்ளார் பாத்திமா பீவி.
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}