சென்னை: புதிய டெண்டர் விடும் வரை சென்னையில் முக்கிய இடங்களில் வாகன நிறுத்தம் இலவசம் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் போதும், வாகன நிறுத்த செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட வாகன நிறுத்தப்பகுதியில் 25 மீட்டர் இடைவேளையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படி தனியார் நிறுவனங்கள் செயல்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. மேலும், கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் முறையான அறிவிப்புபடி வாகன கட்டம் வசூலிக்கவில்லை என்றும், ஒரு வாகனத்திற்கு 300 ரூபாய் வசூலித்தாகவும், சமீபத்தில் பெரும் பிரச்சினை வெடித்தது. இந்த பிரச்சனை காவல் துறை வழக்கு வரை சென்றது.
இதன் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டண வசூல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.. அனுமதி ரத்து செய்யப்பட்டது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், மாநகராட்சி அனுமதி ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து புதிய டெண்டர் விட்டு, அனுமதி வழங்கப்படும் வரை சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி வசூல் செய்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை விவகாரம்: இளையராஜா மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திமுக அரசு குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை: அண்ணாமலை
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
BCCI.. மாத்துறோம்.. மொத்தமா மாத்துறோம்.. இங்கிலாந்து தொடருக்குப் பிறகு.. பிசிசிஐ முடிவு!
Aadi Pooram: ஆண்டாளையும், அம்பாளையும் வழிபாடு செய்ய உகந்த நாள்.. ஆடிப்பூரம்!
திருஞான சம்பந்தருக்காக.. நந்தியே விலகி நின்ற.. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 28, 2025... இன்று ராஜயோகம் தேடி வரும் ராசிகள்
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
{{comments.comment}}