சென்னை: அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 1,38,592 மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், 3 ஆண்டு திமுக ஆட்சியில் 1,69,564 வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முதலாக 1989-1990 ஆம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி. அவரது தொலைநோக்கு பார்வையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன. விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர்.
2010-2011ஆம் ஆண்டு காலத்தில் ஒரே ஆண்டில் 77,158 இலவச வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்துச் சாதனை படைத்தார் கருணாநிதி. அந்தச் சாதனைகளின் அடிச்சுவட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகளைக் கொடுத்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது.
அதற்காக மின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2016-2021 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வேளாண்மை மின் இணைப்புகளில் எண்ணிக்கை 1,38,592 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் மூன்றே ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையைக் கடந்து உன்ன 1,69,564 மின் இணைப்புகள் வழங்கி சாதனை புரிந்துள்ளது.
வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளால் வேளாண் மின் இணைப்புகளில் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இதனால், 3,38,380 ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதியை பெற்றிருக்கின்றன. உழவர்களின் உண்மை தோழனாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சாதித்து காட்டியிருக்கிறார். உழவர்களின் உள்ளத்தை வென்றிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்
சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!
தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி.. 2026ல் தவெக வாகை சூடும்: விஜய்
கோவை மாணவி வன்கொடுமை.. 4மணிநேரம் என்ன செய்தது காவல்துறை: எடப்பாடி பழனிச்சாமி!
கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம்... கூட்டணி தானாக அமையும்... கவலை வேண்டாம் எடப்பாடி பழனிச்சாமி
துல்கர் சல்மானுக்குச் சிக்கல்..காலாவதி தேதி போடாத அரிசிவிற்ற..நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால்!
{{comments.comment}}