பெர்ன்: செவ்வாய் கிரகத்தில் தர்சிஸ் என்ற எரிலைகள் அடங்கிய பிராந்தியத்தில் உள்ள மிகப் பெரிய பழைய எரிமலையின் உச்சியில் கிட்டத்தட்ட 1,50,000 டன் அளவிலான உறை பனி இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டறிந்துள்ளனர்.
பூமிக்கு மாற்று கிரகமாக விளங்கும் புதிய கிரகத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இப்போதே தீவிரம் காட்டி வருகின்றனர். மனிதன் வசிக்கக் கூடிய தகுதியுடன் கூடிய வேற்று கிரகத்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் வேகம் பிடித்துள்ளன. அந்த வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கிய கிரகம் செவ்வாய்தான். இந்த கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதன் குடியேறுவான் என்று பலரும் திடமாக நம்புகின்றனர். இதனால் செவ்வாய் கிரக ஆய்வுகளில் கிடைக்கும் சிறு சிறு செய்திகளும் உற்று நோக்கப்படுகிறது.
செவ்வாய் கிரகம் சூரியக் குடும்பத்தில் நான்காவது கிரகம் ஆகும், அதாவது பூமிக்கு அடுத்து உள்ள கிரகம்தான் செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனெனில் அது இரும்பு ஆக்சைடு தூசியால் மூடப்பட்டிருப்பதால் இந்த நிறம். இதனால்தான் இதை செவ்வாய் என்றும், சிவப்பு கிரகம் என்றும் அழைக்கிறோம்.
இந்த நிலையில் பூமத்திய ரேகைக்கு அருகில் செவ்வாய் கிரகத்தின் முன்னாள் எரிமலைகளின் மேல் உறைபனி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிமலைகள் இப்போது செயலிழந்து விட்டன. இதில் மிகவும் உயரமான எரிமலை ஒலிம்பஸ் மான் என்பது. இந்த எரிமலையின் உச்சியில் 1,50,000 டன் நீர் பனிக்கட்டிகள் உள்ளதாம். உறைபனியாக இது மூடிக் கிடக்கிறது. இந்த எரிமலையானது, 29,600 அடி உயரமும் , சுமார் 450 கிலோமீட்டர் அகலமும் கொண்டது.
இந்த பழங்கால எரிமலை கிழக்கு நோக்டிஸ் லாபிரிந்தஸ் பகுதியில் செவ்வாய் கிரகத்தின் பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ளது.
நாசாவின் மரைனர் 9, வைக்கிங் ஆர்பிட்டர் 1 மற்றும் 2, மார்ஸ் குளோபல் சர்வேயர், மார்ஸ் ஒடிஸி, மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மற்றும் ஈஎஸ்ஏவின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு செவ்வாய் கிரக ஆய்வுக் கலங்களில் கிடைத்த புள்ளி விவங்களைக் கொண்டு
இந்த கண்டுபிடிப்பை சுவிஸ் விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலையின் மேல் உள்ள உறைப்பனி இருப்பது விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான நீராதாரம் இருப்பதையே இது காட்டுவதாக விஞ்ஞானிகள் மகிழ்கிறார்கள்.
Images: ESA
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
{{comments.comment}}