- மீனா
சென்னை: மாம்பழம், பலாப்பழம் வாழைப்பழம், போன்ற பழங்களை சுகர் இருக்குறவங்க சாப்பிடக்கூடாது என்று நாம் பார்த்தோம். அப்போ எந்த பழங்கள் தான் சாப்பிடணும் என்ற கேள்வி நமக்குள் தோன்றும்.
பொதுவாக சுகர் வந்தாலே பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாதா என்று சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். ஏனென்றால் பழங்களில் இனிப்பு சுவை மேலும் சுகரை அதிகப்படுத்தி விடுமோ, என்ற பயம் தான் காரணம். பழங்கள் சுகரை அதிகப்படுத்தும் என்று பொதுவான கருத்து தான் நாம் எல்லாருக்கும் இருக்கும். பழத்தில் இருக்கும் மத்த நல்ல விஷயங்களை நாம் அறிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.
ஆப்பிள், கொய்யா ,மாதுளை, ஆரஞ்சு ,பப்பாளி போன்ற பழங்களை சுகர் உள்ளவங்க தாராளமா எடுத்துக் கொள்ளலாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த பழங்களை நாம் எடுத்துக் கொள்ளும் போது இயற்கையாகவே அதில் வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நுண்ணுயிரி சத்துக்கள் ஏராளமான அளவில் இருப்பதினால் இதை சுகர் உள்ளவர்கள் தாராளமா எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் தான் சூட்சுமம் அடங்கி இருக்கு.
பொதுவாக காயாக இருந்து பழுப்பதைத் தான் பழம் என்று சொல்லுவோம். முழுப் பழமாக மாறிய பிறகு சாப்பிடுவதை விட அரைப் பழமாக இருக்கும்போது சாப்பிடுவது நல்லதாம். உதாரணத்திற்கு, கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை மிகவும் கனிந்த நிலையில் எடுத்துக் கொள்ளாமல், கனிவதற்கு முன்பு உள்ள ஸ்டேஜில் எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனென்றால் பப்பாளி போன்ற பழங்கள் நன்கு பழுத்த பிறகு அதில் இனிப்பு சத்துக்கள் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால் முடிந்த அளவு கனிவதற்கு முன்பு அந்த பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாக பழங்களை சாப்பாடோடு சேர்த்து சாப்பிடுவோம் அல்லது சாப்பிட்ட பின்பு எடுத்துக் கொள்வோம். ஆனால் இந்த முறையை மாற்றி காலை உணவு மதியம் உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக இந்த பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த மாதிரி நேரங்களில் தான் நாம் தேவையில்லாத, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடிய எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொள்வோம் அதை எடுக்காமல் தவிர்க்கலாம். இல்லையென்றால் மாலை நேரத்தில் கூட இந்த பழங்களை சாப்பிடலாம்.
மேலும் இன்சுலின் போட்டுக் கொள்கிறவர்கள் கூட சுகர் லோவாகாமல் இருப்பதற்கு அவர்கள் தூங்குவதற்கு முன்பு இரவு நேரத்தில் இந்த பழங்களை அளவோடு சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் லோசுகர் ஏற்படுவதை தடுக்க முடியும். சில பேருக்கு ஜூஸ் எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் கொய்யா ஆப்பிள் , மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களை அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. ஏனென்றால் பழங்களை ஜூஸாக மாற்றும்போது அதனுடைய இனிப்புச் சத்துக்கள் ஆட்டோமேட்டிக்காக அதிகரிக்க செய்கிறது. அதனால் பழங்களை அப்படியே கட் பண்ணி சாப்பிடுவதே சாலச் சிறந்தது.
என்னங்க கிளியர் ஆயிருச்சா!
டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு.. அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
ஆடிப் பெருக்கு சரி.. அந்த 18ம் எண்ணுக்கு எவ்வளவு விசேஷங்கள் இருக்கு தெரியுமா?
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
{{comments.comment}}