டெல்லி: 70ஆவது தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதில் சிறந்த நடிகராக காந்தாரா பட ஹீரோவும், இயக்குநருமான ரிஷாப் ஷெட்டி தேர்வாகியுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்திற்காக நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் சிறந்த படத்திற்கான, நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த 2022ம் ஆண்டுக்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே படத்தில் பணியாற்றிய சிறந்த பின்னணி இசைக்கான விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.அதேபோல் சிறந்த ஒலி மற்றும் ஒளி அமைப்புக்காக கேமராமேன் ரவிவர்மன் தட்டி சென்றார். பொன்னியின் செல்வன் படம் மட்டும் மொத்தம் 4 விருதுகளை வாரி குவித்துள்ளது.
யாஷ் நடித்த கேஜிஎப் 2 சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன், 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகையாகவும் மற்றும் சிறந்த நடன காட்சிகளுக்காக மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே என்ற பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் 2 விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகை விருதை மான்சி பரேக்குடன் நடிகை நித்யா மேனன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது நீனா குப்தாவுக்குக் கிடைத்துள்ளது. துணை நடிகர் விருது பவன் ராஜ் மல்ஹோத்ராவுக்குக் கிடைத்துள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாலிகாபுரம் படத்தில் நடித்த மாஸ்டர் ஸ்ரீபத் பெறுகிறார்.
சிறந்த பொழுதுபோக்கு, சண்டை பயிற்சி, நடிகர் என மூன்று பிரிவுகளில் கன்னட மொழியின் காந்தாரா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக கேசரியா என்ற பாடலை பாடிய அர்ஜித் சிங் சிறந்த பின்னணிப் பாடகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் 2022 ஆம் ஆண்டு சிறந்த படமாக மலையாளத்தில் வெளியான ஆட்டம் திரைப்படம் தட்டிச் சென்றது.
மலையாளத்தில் வெளியான சவுதி வெல்லக்கா படத்தின் பாடலுக்காக 2022 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி பாடகிக்கான பாம்பே ஜெயஸ்ரீக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் (பாடல்) விருது பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக ப்ரீதம் பெறுகிறார்.
சிறந்த படங்களாக தமிழில் பொன்னியின் செல்வன் 1, தெலுங்கில் கார்த்திகேயா, கன்னடத்தில் கேஜிஎப் 2 ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது . தாதா சாகேப் பால்கே விருது பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு குழு அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}