சென்னை: இந்திய கிராமப்புற வேலைவாய்ப்பில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் ஜூலை 1ம் தேதி முதல் வரப்போகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (அதாவது 100 நாள் வேலைத் திட்டம்) முற்றிலும் புதிய வடிவத்திற்கு மாறுகிறது.
இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் தான் விக்சித் பாரத் - ஜி ராம் ஜி சட்டம், 2025.
பொதுமக்களுக்குப் புரியும் வகையில், இந்த புதிய சட்டம் எப்போது அமலுக்கு வருகிறது, இதனால் தொழிலாளர்களுக்கு என்னென்ன நன்மைகள் மற்றும் மாற்றங்கள் கிடைக்கப் போகின்றன என்பதைப் பற்றிய முழுமையான விபரங்களை இப்போது பார்ப்போம்.
1. 'விக்சித் பாரத் - ஜி ராம் ஜி' சட்டம் என்றால் என்ன?
விக்சித் பாரத் @2047 (Viksit Bharat @2047) என்ற தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமங்களில் நிலையான கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் முழுப் பெயர் விக்சித் பாரத் – கேரண்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB–G RAM G] என்பதாகும்.
2. இதில் உள்ள முக்கிய மாற்றங்கள் என்ன?

பழைய திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு 100 நாட்கள் வேலை நாட்களாக இருந்தது. புதிய திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டுக்கு 125 நாட்கள் வேலை நாட்களாகும்.
பழைய திட்டத்தின் கீழ் ஆப் மூலம் அல்லது பதிவேடுகள் மூலம் வருகைப் பதிவு பராமரிக்கப்பட்டது. புதிய திட்டத்தின் கீழ் முக அங்கீகாரம் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
பழைய திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது மற்றும் ஏரிகள் தூர்வாருவது ஆகியவை மட்டுமே இருந்தது. புதிய திட்டத்தின் கீழ் அவை தவிர, நீர் பாதுகாப்பு, கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதார உருவாக்கம், தீவிர காலநிலை மாற்றம் தணிப்பு பணிகள் உள்ளிட்டவையும் அடங்கும்.
3. எப்போது முதல் அமலுக்கு வருகிறது?
மத்திய அரசின் அறிவிப்பின்படி, இந்த புதிய சட்டம் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் ஒரே நேரத்தில் அமலுக்கு வருகிறது. அதே நாளில் பழைய MGNREGA சட்டம் ரத்து செய்யப்படும்.
பழைய திட்டம் மாறுவதால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படாது. இடைக்காலத் தொய்வு ஏதும் இல்லாமல், பழைய திட்ட வேலைகள் அப்படியே புதிய திட்டத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடைபெறும்.
4. தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இனி கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்களுக்குப் பதிலாக 125 நாட்கள் கட்டாய வேலை உறுதி செய்யப்படும்.
பழைய ஜாப் கார்டுகள் இந்தத் திட்டத்திற்கும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது e-KYC முடிக்கப்பட்ட பழைய ஜாப் கார்டுகள் அனைத்தும் புதிய 'கிராமிண் ரோஜ்கர் கேரண்டி கார்டு' (Gramin Rozgar Guarantee Card) வழங்கப்படும் வரை செல்லும்.
வேலை கேட்டு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். தவறினால், அவர்களுக்கு வேலையில்லா உதவித்தொகை (Unemployment Allowance) மாநில அரசால் வழங்கப்படும்.
தொழிலாளியின் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டருக்கு அப்பால் வேலை வழங்கப்பட்டால், போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்காக 10% கூடுதல் கூலி வழங்கப்படும்.
சுத்தமான குடிநீர், குழந்தைகளுக்கு நிழற்குடை வசதி, ஓய்வு நேரம் மற்றும் முதலுதவி பெட்டி ஆகியவை பணித்தளத்தில் கட்டாயம் இருக்க வேண்டும்.
5. கூலி மற்றும் பணம் வழங்கும் முறை
சட்டம் பிரிவு 10-ன் படி, உயர்த்தப்பட்ட புதிய கூலி விகிதங்கள் அறிவிக்கப்படும். அதுவரை பழைய MGNREGA கூலி விகிதமே தொடரும்.
கூலிப்பணம் வாராந்திர அடிப்படையிலோ அல்லது அதிகபட்சமாக 15 நாட்களுக்குள்ளோ தொழிலாளர்களின் வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கில் நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் நேரடியாகச் செலுத்தப்படும்.
பணம் வழங்க 15 நாட்களுக்கு மேல் தாமதமானால், தொழிலாளர்களுக்குத் தாமதத்திற்கான இழப்பீடாக நாள் ஒன்றுக்கு விடுபட்ட தொகையில் 0.05% வட்டி சேர்த்து வழங்கப்படும்.
6. முறைகேடுகளைத் தடுக்கப் புதிய தொழில்நுட்பம்
வேலை செய்யும் இடத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க முக அங்கீகார (Face Authentication) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். சிக்னல் கிடைக்காத கிராமங்களில் விதிவிலக்கு அளிக்க சிறப்பு வழிமுறைகளும் உண்டு.
இந்த திட்டத்தில் இடைத்தரகர்களோ அல்லது ஒப்பந்தக்காரர்களோ (Contractors) அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மனித உழைப்பை மட்டுமே நம்பி இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், மனிதர்களின் வேலையைப் பறிக்கும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய ஒவ்வொரு பணித்தளத்திலும் திட்டத்தின் மதிப்பு, தொழிலாளர் நாட்கள், பொருட்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய "ஜனதா போர்டு" வைக்கப்படும். வாராந்திர பொது மக்கள் தணிக்கைக் கூட்டங்களும் நடத்தப்படும்.
7. விவசாயக் காலங்களில் என்ன நடக்கும்?
விவசாயப் பணிகளுக்கு (விதைத்தல் மற்றும் அறுவடை காலங்கள்) ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க, மாநில அரசுகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள முதன்மையான விவசாயக் காலங்களைக் கண்டறிந்து, அந்தக் குறிப்பிட்ட நாட்களில் இத்திட்டத்தின் கீழ் வேலைகள் வழங்கப்படாது என அறிவிக்கும். இதன் மூலம் விவசாயப் பணிகளும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
முந்தைய திமுக அரசு இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் தற்போது புதிதாக அமைந்துள்ள தவெக அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளதால், தமிழ்நாட்டிலும் இந்த சட்டமானது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
விநாயகர் துதி
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்!
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}