Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

Oct 13, 2026,05:08 PM IST

- கவிஞர் க. யாஸ்மின் சிராஜுதீன்


ஹாய் பிரண்ட்ஸ்.. ஈவ்னிங் வந்தாச்சு.. கிளைமேட்டும் மாறிட்டு வருது.. சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாருக்கும்ல!


வாங்க .. ராகி +முருங்கை கீரை அடை செஞ்சு சாப்பிட்டுப் பார்ப்போம்.


ராகி அடை சத்தானதும் சுவையானதும் ஆகும். காலை உணவாகவோ மாலை சிற்றுண்டியாகவோ செய்யலாம்.


தேவையான பொருட்கள்




1.ராகி மாவு – 1 கப்

2. வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

3. பச்சை மிளகாய் – 1 அல்லது 2

4. கறிவேப்பிலை – சிறிதளவு

5.கொத்தமல்லி – சிறிதளவு

6.சீரகம் – ½ தேக்கரண்டி

7.உப்பு – தேவையான அளவு

8. தண்ணீர் – தேவையான அளவு

9.எண்ணெய் – சிறிதளவு

10. முருங்கைகீரை  __ ஒருகைப்பிடி அளவு 


செய்முறை


ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,நறுக்கிய  வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை கொத்தமல்லி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.


சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து,  கையில் சிறிது தண்ணீர் அல்லது எண்ணெய் தடவி, மாவைச் சிறிய உருண்டையாக எடுத்து வட்டமாகத் தட்டவும். 


தட்டுவதற்கு வாழை இலை அல்லது எண்ணெய் பாக்கெட் அல்லது பாட்டி தோசைக்கல்லில் வைத்து அப்படியே தட்டுவது போலவும் தட்டலாம்.


தட்டக்கூடிய பதத்தில் மாவைப் பிசையவும். மாவு மிகவும் கெட்டியாகவோ தண்ணீராகவோ இருக்கக் கூடாது. சூடான தோசைக்கல்லில் அடையைப் போட்டு, சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.


இப்போது  ராகி+முருங்கை அடை  ரெடி...




சரி வாங்க சாப்பிடலாம் 


எதனுடன் சாப்பிடலாம்? என யோசிக்கிறீங்களா.. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் சாம்பார் ஆகியவை இதற்கு சூப்பரான ஜோடிங்க.


ராகி அடையில் முருங்கைக்கீரை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:


எலும்பு வலிமை:  கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.


கண் ஆரோக்கியம்:  வைட்டமின் A சத்துக்கள் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.


செரிமானம்: நார்ச்சத்து குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.


உடல் ஆரோக்கியம்: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.


சத்தான உணவு: ராகி மற்றும் முருங்கைக்கீரை சேர்ந்து பல ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.


சத்தான சுவையான ராகி அடை இனிய மாலைப் பொழுதை  மகிழ்ச்சியாக்கும்... பகிர்ந்து உண்போம் ...! ருசித்து மகிழ்வோம்  ...!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்