- எம்.எல்.பிரபா
எல்லா இடத்திலும் சுலபமாக கிடைக்கும் காய் கத்தரிக்காய். ஆனால் சில பேருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. வைட்டமின்களும், இரும்புச் சத்துக்களும், நார் சத்துக்களும் கொண்ட கத்திரிக்காயை உணவில் நாம் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு நல்லது. கத்திரிக்காயை இப்படியும் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். சுவை சூப்பராக இருக்கும்.
தேவையான பொருள்கள்:
நீல நிற கத்தரிக்காய் பெரியது -4, சிறிது எண்ணெய், மிளகாய் வற்றல்-2, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன். ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு. சிறிது கருவேப்பிலை.
செய்முறை :

முதலில் கத்தரிக்காயை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு அதை ஈரம் இல்லாமல் ஒரு துணியால் துடைத்து விடவும். அடுத்து சமையல் எண்ணெயை எடுத்து கத்தரிக்காய் முழுவதும் மேல்புறம் நன்றாக தடவ வேண்டும். பிறகு ஸ்டவ்வை சிம்மில் வைக்க வேண்டும். கத்தரிக்காயின் காம்பை பிடித்துக் கொண்டு நன்றாக நெருப்பில் சுட வேண்டும். அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விட வேண்டும்.
அதற்குள் ஒரு வாணலியை எடுத்து சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போடவும். கடுகு பொரிந்த உடன் காய்ந்த மிளகாயை கிள்ளி போட வேண்டும். அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் போட்டு நன்றாக வறுக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலையை போட்டு வதக்கவும்.
வாணலியை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்கவும். கத்தரிக்காயின் மேல் தோலை உரித்து எடுக்கவும். காம்பையும் நீக்கவும். கத்தரிக்காய் பஞ்சு போல நன்றாக வெந்திருக்கும். அதை பிசைந்து வாணலியில் போட்டு நன்றாக கலக்கவும். தேவையான உப்பை சேர்க்கவும் .சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி ,தோசை போன்றவைக்கு தொட்டுக்கொள்ள சைடு டிஷ் ஆகவும் வைத்துக் கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் எளிது தானே ,முயற்சி செய்து தான் பாருங்களேன்.பிறகு "சபாஷ் "என்று உங்களை நீங்களே தட்டிக் கொடுப்பீர்கள். மற்றவர்களிடம் பாராட்டும் பெறுவீர்கள்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
தமிழகத்தில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்
6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?
ஓதாத கல்வி கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (4)
சித்தப்பா!
கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!
நாளைய என் தேசம்!
{{comments.comment}}