அளவுக்கு மீறிய சீற்றம் நன்மை தருமா?

Nov 28, 2026,12:13 PM IST

- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்


சீற்றம் கடும் உணர்ச்சியே

கோபத்தின் உச்சக்கட்டமே...!


இயல்பான உணர்ச்சி சீற்றமாகுமா?


அளவுக்கு மீறிய சீற்றம் நன்மை தருமா?


பிறருக்குத் தீமையை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா? 


சீற்றம் பிறர் நம்மை அவமதித்ததின் விளைவா? 


நமது விருப்பங்கள் நிறைவேறாததின்  விரக்தியா?




அநீதிகளையும்  தவறுகளையும் கண்டதால் 

பொங்கி எழுந்த துணிச்சலா? 


பொறுமையின்மையா?


புரிதல் இல்லாமையா?


சிந்திக்கும் திறனை பாதிக்கும் சீற்றமே!


வார்த்தைகள் கடுமையான சொற்களாய் வெளிப்படுமே


பிறர் மனதைப் புண்படுத்துமே


குடும்பத்திலும் சமூகத்திலும் உறவுகள் நிலைகுலையுமே. 


கோபம் என்பது 

புயல் காற்றே 

விளைவுகள் கணக்கிட்டால் பெருஞ்சேதமே! 


சீற்றத்தைக் 

கட்டுப்படுத்த வேண்டுமே


பொறுமையுடன் செயல்பட வேண்டுமே


கோபம் வரும்போது அமைதிகாக்க

வேண்டுமே


பிறர் கருத்துகளையும் மதிக்க வேண்டுமே


பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமே.


பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமே


பிறரிடம் அன்புடனும் மரியாதையுடனும் பழக வேண்டுமே


சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி 

என திருக்குறளும் எடுத்தியம்புதே 


சினம் தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிக்குமே

உறவுகளையும் பாதிக்குமே


சீற்றம்  மனிதனின் இயல்பான உணர்ச்சியாகவே இருந்தாலுமே


அதற்கு நாம் அடிமையாகிவிடக் கூடாதே


கோபத்தைவிடப் பொறுமை வலிமையானதே 


வெறுப்பை விட அன்பு உயர்வானதே 


சீற்றத்தை வென்று அமைதியைக் கடைப்பிடிப்பதே சிறந்த மனிதப் பண்பாகுமே


கோபத்தைக் கட்டுப்படுத்துபவன் தன்னையே வென்றவனாகிறானே


கோபத்தோடு எழுந்தவன்

வெறுங்கையோடு  அமர்வான் என்பது நிதர்சனமே 


சீற்றம் கொள்வது சிறப்பன்று அதனை அடக்கி ஆள்வதே நம் வாழ்வின்  உயர்வாகுமே 


சீற்றம் தவிர்ப்போம்; 

உலகை அன்பால் அரவணைப்போம்! 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன், இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்குப் பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாகக்  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்