ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு!

Jun 17, 2026,12:34 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு 

கையில் ஏந்தவே....

எத்தனை  பயிற்சி விரலுக்கே...

கிறுக்கள் எல்லாம் ஓவியமே 

பென்சிலுக்கு சிறகு முளைத்ததால்...

ஓவியத்தின் சுவர் குறிப்பேடுதான் 

வெள்ளை வண்ண பளிங்குதான் 

பதியும் வண்ண கற்கள்தான் 

குழந்தையும் குமரன், குமரி ஆகவே 

பென்சில் பேனா ஆனதே 

குறிப்பேடு கோப்பு  ஆனதே...

கிறுக்கல் பச்சை மை கையெழுத்தானதே....




மாணவச்சிறகுகள் விரியட்டும் 

கல்வி  வானில் பறக்கட்டும் 

கல்வி வாசம் உலகம் முழுவதும் வீசட்டும்....

ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு

எத்தனை சாதனை படைக்குது

மனதில் பட்டாம்பூச்சி பறக்குது...

உயர உயர  போகுது..

சிகரம் தொட்டு மகிழுது...


ஒரு பென்சில்,ஒரு குறிப்பேடு 

பேசுது.....

செல்லமே  சிறப்பாய் கற்றிடு 

என்றது....

அழகாய் புன்னகை பூத்தது...

ஒன்றாய்  சேர்ந்து  படித்தது...

மனதில் பெருமை கொண்டது....

ஒரு பென்சில், ஒரு குறிப்பேடு......


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்