"கணபதி ராஜா வந்தாராம்"... வெற்றிகள் தரும் விநாயகர் சதுர்த்தி!

Sep 18, 2023,11:52 AM IST

சென்னை : முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடுகிறோம். தென்னிந்தியாவில் 1 முதல் 3 நாள் உற்சவமாகவும், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் 10 உற்சவமாகவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம்.


சிவன் - பார்வதியின் மகனான விநாயகப் பெருமான் சிறுவனமாக இருந்த போது, ஒருமுறை அவரை வீட்டின் காவலாக இருக்க சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என சொல்லி விட்டு பார்வதி தேவி பூஜை செய்ய சென்று விட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த சிவ பெருமான் வீட்டிற்குள் செல்ல முயற்சித்தார். ஆனால் விநாயகர் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபம் கொண்ட சிவன், சிறுவன் என்று பாராமல் விநாயகருடன் சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் கோபம் அதிகரித்து விநாயகரின் தலையை துண்டித்து விட்டார் சிவ பெருமான்.


அந்த சமயத்தில் அங்கு வந்த பார்வதி தேவி, கணபதியின் தலை துண்டிக்கப்பட்டதை கண்டு பதறி, கதறினாள். சிவன் மீது கோபம் கொண்ட பார்வதி தேவி, கணபதியின் உயிரை மீட்டு தராவிட்டால் இந்த உலகையே அழித்து விடுவதாக ஆக்ரோஷம் அடைந்தாள். பார்வதியின் பேச்சை கேட்டு தனது தவறை உணர்ந்த சிவ பெருமான், சிவ கணங்களை அனுப்பி, நீங்கள் செல்லும் வழியில் முதலில் இருக்கும் உயிரினத்தின் தலையை கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.




சிவ கணகங்கள் சென்ற வழியில் முதலில் தென்பட்ட யானை தான். அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். யானையின் தலையை கொண்டு விநாயகரை மீண்டும் உயிர் பெற செய்தார் சிவபெருமான். அவ்வாறு விநாயகர், மீண்டும் புதிய பிறவி எடுத்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடுகிறோம். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என்கிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18 ம் தேதி கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 18 ம் தேதி காலத 11.39 துவங்கி, செப்டம்பர் 19 ம் தேதி காலை 11.50 வரை சதுர்த்தி திதி உள்ளதால் இரண்டு நாட்களும் விநாயகரை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது.


விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்த புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து, அந்த சிலைக்கு அருகம்புல், எருகம்பூ மாலை அணிவித்து, விநாயகருக்கு பிரியமான மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, பழ வகைகள், சுண்டல், சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட வேண்டும். வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையை ஒன்றரை நாளுக்கு பிறகு அல்லது 3வது நாளில் எடுத்துச் சென்று ஓடும் நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள், தடைகள், தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் பெருகும், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சமீபத்திய செய்திகள்

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்