இஸ்ரேலில் அதானி.. ஊரே அல்லோகல்லப்பட்டாலும்.. புன்சிரிப்புடன் புது டீல்!

Feb 01, 2023,10:18 AM IST
ஹபியா:  அதானி குழுமத்தை பெரும் புயல்கள் சூழ்ந்து நின்றாலும், அவரது நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தாலும், உலகப் பணக்காரர்கள் வரிசையில் வீழ்ச்சி அடைந்தாலும்.. தனது பயணம் நிற்பதில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக நேற்று ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் கெளதம் அதானி.



இஸ்ரேலின் ஹபியா துறைமுகத்தை 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார் கெளதம் அதானி. இதுதொடர்பான ஒப்பந்தம் நேற்று இஸ்ரேலில் கையெழுத்தானது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு, கெளதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

ஹபியா துறைமுக டீல் மட்டுமல்லாமல், டெல்அவிவ் நகரில் செயற்கை நுன்னறிவு ஆய்வகம் ஒன்றைத் தொடங்கப் போவதாகவும் அதானி அறிவித்துள்ளார். 

அமரிக்காவின் ஹின்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் மீது சரமாரியான மோசடிப் புகார்களைக் கூறியுள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளன. அதானியும் உலகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில்  7வது இடத்துக்குப் போய் விட்டார். ஆனாலும் அதானி நிலை குலைந்த மாதிரி தெரியவில்லை. இஸ்ரேலில் புது டீலை மேற்கொண்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரேல் பிரதமர் நதன்யாகு கூறுகையில், இது மிக முக்கியமான ஒப்பந்தம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இது மேலும் மேம்படுத்தும் என்றார்.  இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஹபியா. வர்த்தக துறைமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்