மும்பை: பெரும் கோடீஸ்வரர் கெளதம் அதானியின் இளைய மகன் ஜீத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வைர வியாபாரியின் மகளை மணக்கவிருக்கிறார் ஜீத்.
அதானி ஏர்போர்ட்ஸ், அதானி டிஜிட்டல் லேப்ஸ் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார் ஜீத் அதானி. அகமதாபாத்தில் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மிகவும் எளிய முறையில், பெரிய அளவில் யாருக்கும் சொல்லாமல் இதை நடத்தியுள்ளனர். மிகவும் நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனராம்.
பிரபல வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின் ஷாவைத்தான் மணக்கவிருக்கிறார் ஜீத் அதானி. திருமண நிச்சயதார்த்தம் குறித்து எந்தத் தகவலையும் அதானி குடும்பத்தினர் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் இவர்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியான பின்னர்தான் ஜீத் அதானிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததே தெரியவந்தது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் படித்தவர் ஜீத் அதானி. அதானி குரூப்பில் துணைத் தலைவராக இருக்கிறார்.
கெளதம் அதானிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கரண் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கான தலைமை செயலதிகாரியாக இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் பரீதி ஷிராப். சிரில்அமர்சந்த் மங்கள்தாஸ் என்ற சட்ட நிறுவனத்தின் நிறுவனர் சிரில் ஷிராப்பின் மகள்தான் பரீதி. கரண் அதானியை விட 10 வயது இளையவராம் ஜீத் அதானி.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}