டெல்லி: பிரபலமான ரேமான்ட் நிறுவன அதிபர் கெளதம் சிங்கானியாவுக்கும், அவரது மனைவி நவாஸ் மோடிக்கும் இடையிலான மோதலால் இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது சண்டை மற்றும் பிரிவால் ரேமான்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு பெரிதாக சரிந்து விட்டது. இதனால் ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து விட்டதாம்.
இந்தியாவின் முக்கியமான தொழில் நிறுவனம் ரேமான்ட்ஸ். இதன் நிர்வாக இயக்குநராக இருப்பவர் கெளதம் சிங்கானியா. இவரது மனைவி நவாஸ் மோடி. ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் கிளினிக்குகளை இந்தியாவில் பிரபலமாக்கியவர் நவாஸ் மோடி.
32 வருட திருமண வாழ்க்கையில் இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது இவர்களது மண வாழ்க்கையில் புயல் வீசி வருகிறது. இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில்தான் தன்னையும் தனது மகளையும் சிங்கானியா கை நீட்டி அடித்து விட்டார் என்று நவாஸ் மோடி புகார் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை விட்டுப் பிரிந்தது, அவரை கை நீட்டி அடித்தது போன்ற செய்தி காட்டுத் தீ போல பரவி தற்போது ரேமான்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பில் தீ வைத்து விட்டது. அதன் பங்கு மதிப்புகள் வேகமாக சரிந்து ரூ. 1500 கோடி அளவுக்கு சொத்து மதிப்பு குறைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாம்.
தற்போது கணவனும், மனைவியும் ஆளுக்கு ஒரு சட்ட நிறுவனத்தை வைத்துக் கொண்டு மணமுறிவு குறித்த பேச்சுக்களில் ஈடுட்டுள்ளனர். ரேமான்ட் நிறுவன பங்குகளில் 75 சதவீதத்தை கேட்கிறாராம் நவாஸ் மோடி. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி விட்டாராம் சிங்கானியா. நான் பங்கு கேட்பது எனது மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான். நான் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் எனது மகள்களின் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என்று வாதிடுகிறார் நவாஸ் மோடி.

இந்தத் தம்பதிகளின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க பல்வேறு தொழிலதிபர்கள் முயன்று வருகிறார்களாம். முகேஷ் அம்பானி வரைக்கும் கூட பிரச்சினை போயுள்ளதாக கூறப்படுகிறது. ரேமான்ட் நிறுவன இயக்குநர்கள் குழுவில் நவாஸ் மோடியும் உள்ளார். இதுதவிர தனிப்பட்ட முறையில் பாடி ஆர்ட் என்ற பிட்னஸ் மையங்களையும் அவர் நடத்தி வருகிறார்.
பொண்டாட்டியை அடிச்சாலோ அல்லது பகைச்சுக்கிட்டாலோ இதுதான் கதி.. அது சாதாரண பெரியசாமியா இருந்தாலும் சரி.. இல்லாட்டி ரேமான்ட் சிங்கானியாவா இருந்தாலும் சரி..!
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}