- மஞ்சுளா தேவி
திருநெல்வேலி: நெல்லை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் வெள்ள பாதிப்பு தொடர்வதால், இரு மாவட்டங்களிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு ஏரிகள் உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீர் மளமளவென கிராமம் நகரம் என ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் சூழ்ந்து தீவு போல் காட்சியளிக்கிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களில் இன்று அதீத கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் கனமழை தொடரும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஏற்கனவே வெள்ளம் போல மழை நீர் சூழ்ந்திருப்பதால், தண்ணீர் வடிந்து நிலைமை சீராக இன்னும் ஒரு வாரம் ஆகும். இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறையாக அரசு அளித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}