மதுரை: விஜய் நடித்த கோட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி நாளை வெளிவர உள்ள கோட் படத்தின் பீவர் தான். தி கோட் எப்படி இருக்கும், அதில் விஜய்யின் ரோல் என்னவாக இருக்கும், சண்டை படமா? குடும்ப படமா? விஜயகாந்த் ஏஐ தொழிநுட்பம் ஏன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பல கேள்விகளை சுமந்து கொண்டு விஜய் ரசிகர்கள் வலம் வருவது நாம் அனைவரும் அறிந்தே. இந்நிலையில், தி கோட் படத்தின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா அறிவிப்பு வேறு வெளியிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்களிடையே மேலும் ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்த படம் குறித்த தகவல்களும் ஒவ்வொன்றாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, வைபவ், அஜ்மல், அரவிந்த், உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக தயாராகி உள்ளது. படம் வெளியாவதற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் பிளக்ஸ் பேனர் வைக்க அனுமதி கோரி மதுரை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேனியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவராக இருக்கக் கூடிய லெப்ட் பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பிளக்ஸ், பேனர்கள் வைக்க உள்ளாட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிளக்ஸ், பேனர் வைக்க காவல்துறை அனுமதி தேவையில்லை. மனு தாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை அணுகி அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!
புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!
கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக
ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!
{{comments.comment}}