சென்னை : விஜய் நடித்த கோட் (The Greatest Of All Time) படம் இன்று (செப்டம்பர் 05) உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. இந்த படத்திற்காக முதல் ஆளாக அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் முதல் ஷோவை பார்த்து விட்டு சென்றுள்ளார். சோஷியல் மீடியாவில் திரும்பி பக்கம் எல்லாம் கோட் படம் பற்றிய பேச்சுக்களும், ரசிகர்களின் கருத்துக்களும் தான் உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள கோட் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் இதற்கு என்ன ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
கோட் படத்தின் கதையை ஏற்கனவே படக்குழுவினரே சொல்லி விட்டார்கள். ரா ஏஜன்ட்டாக அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி உள்ளார் விஜய். இந்த படத்தில் டி ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்யின் இளமை கால தோற்றம் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே விஜய்யின் இளமை கால நகைச்சுவைகள், சேட்டைகள் என கலகலப்பாக துவக்கி உள்ளனர். யார் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான என்ட்ரி கொடுக்கும் விஜய், ஆரம்பத்தில் காமெடியும், இன்ட்ர்வலுக்கு முன் பெரிய ட்விஸ்டாக மாஸ் ஆக்ஷனும் காட்டுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய்யிடம், வெங்கட் பிரபு நன்றாக வேலை வாங்கி உள்ளார் என்பது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. டி ஏஜிங் லுக்கில் விஜய் செம மாஸாக இருக்கிறார். ஒரு முழு நீள கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக கோட் படத்தை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். கிரிக்கெட் முதல் இதுவரை இயக்கிய படங்கள் என அனைத்தையும் சேர்த்து ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தை விஜய் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாடாமல் இருக்க முடியாது. குறிப்பாக கடைசி 30 நிமிடங்கள் வேற வெலவல். தியேட்டரில் விசில் சத்தம் காதை கிளிக்கிறது.
கடைசி 30 நிமிடங்களில் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, தோனி ரசிகர்களும் கொண்டாடி தீர்க்கிறார்கள். இளைய தளபதியாக நடித்த பல படங்களில் காட்டிய திறமையையும், தளபதியாக வழக்கம் போல் ரசிகர்களின் மனதை திருடும் வேலையையும் விஜய் சிறப்பாக செய்துள்ளார். படம் சற்று நீளமாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் ரசிக்கும் படி உள்ளது. விஜய் ரசிகர்களிடம் பாராட்டையும், அவர்களின் ரசனையையும் வென்று விட்டார் வெங்கட் பிரபு.
படத்தின் முக்கிய ஹைலைட் கேப்டன் விஜயகாந்த்.. கூஸ்பம்ப்ஸ் கிளப்பக் கூடிய சீனாக அதை வடிவமைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.
படத்தின் பிளஸ் :
படத்தின் மிகப் பெரிய பிளஸ், யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை தான். படம் முழுக்க வரும் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலம். விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள், பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்டோரின் நடிப்பு, படத்தின் க்ளைமாக்ஸ் இவை அனைத்தும் மிகப் பெரிய பலம். டி ஏஜிங்கில் விஜய், ஏஐ தொழில்நுட்பத்தில் விஜய்காந்த் ஆகியோரை கண்முன் கொண்டு வந்து மிரட்டி உள்ளார்கள்.
படத்தின் மைனஸ் :
படத்தின் ரன்னிங் டைம் தான் மைனசாக உள்ளது. நீளமான ஆக்ஷன் காட்சிகள் சற்று போரடிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகளை கொஞ்சம் குறைத்து, விஜய்யின் ஆக்டிங் காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
விஜய்யின் கோட் படத்திற்கு ரசிகர்கள் 5 க்கு 3.5 என ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள். சில பல குறைகளை நீக்கி விட்டுப் பார்த்தால் படம் மிகப் பெரிய ஃபீஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்பார்ப்புகள் பொய்க்கவில்லை. அதற்கு மாறாக, கூடுதலான சர்பிரைஸ்களை வைத்துள்ளார் வெங்கட் பிரபு. மொத்தத்தில் கோட் ரசிகர்கள் மனதை அழுத்தமான இடத்தை பிடித்து விட்டது. விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பல தரப்பட்ட கலவைகள் ஒரே படத்தில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பாக, நன்கு என்ஜாய் பண்ணும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு
ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1996 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழ் தெரிந்தவர்களுக்கு வடபழநி முருகன் கோவிலில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.50,000 வரை சம்பளம்
மணக்கமணக்க சாப்பிடலாம்.. மதுரையில் பிரம்மாண்ட உணவுத் திருவிழா 2025.. சுவைக்க வாங்க!
இலவச விமானப் பயணம்.. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தரும் அசத்தலான சலுகை!
சாதனை இந்தியர் சுபான்ஷு சுக்லா.. 14ம் தேதி பூமி திரும்புகிறார்.. தடபுடலாக வரவேற்கத் தயாராகும் நாசா!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லீங்க இன்றும் உயர்வு தான்... அதுவும் சவரனுக்கு ரூ.440 உயர்வு!
தேனியில் விவசாயிகளுடன் இணைந்து ஆடு மாடு மேய்ப்பேன்.. சீமானின் அதிரடி அறிவிப்பால் பரபரப்பு!
{{comments.comment}}