சிவகங்கை: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு கோழி விற்பனை களைகட்டி உள்ளது. மக்களின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கால்நடை சந்தை புகழ்பெற்றதாகும். இங்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்று வட்டார பகுதிகளான மணல்மேடு, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்கள் ஆடு கோழிகள் வளர்ப்பதை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் வளர்க்கும் வெள்ளாடு, செம்மறியாடு, கிடாய் மற்றும் கோழிகளை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடை சந்தைகளில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.
இங்கு வாரந்தோறும் நடைபெறும் கால்நடை சந்தைகளில் வெளியூர் மற்றும் உள்ளூர் மக்கள் வந்து ஆடு கோழிகளை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக பக்ரீத், தீபாவளி, ரம்ஜான், உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் திருப்புவனம் கால்நடைச் சந்தை களைகட்டும். அப்போது அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை கால்நடைகள் விற்பனைகள் ஜோராக நடைபெற்று வரும்.
அந்த வகையில் பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான மக்கள் ஆடுகள் கோழிகளை வாங்க கேரளா, தேனி, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருப்புவனம் கால்நடை சந்தையில் குவிந்தனர். அதிகாலை 5 மணி முதலே அதிக மக்கள் வாங்க வந்ததால் ஆடு கோழி விற்பனை களைகட்டியது.
சாதாரணமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு கடந்த வாரம் 7000 முதல் 8000 வரை விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று அதிக மக்கள் ஆடும் கோழிகளை வாங்க வந்ததால் 10 கிலோ எடை கொண்ட ஆட்டு விலை உயர்ந்து 12000 வரை விற்பனை செய்யப்பட்டது.20 கிலோ எடை கொண்ட கிடா ரூபாய் 23 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் இரண்டு ஜோடி வான்கோழி ரூபாய் 1300க்கும், ஒரு கிலோ சேவல் ரூபாய் 400க்கும் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குதிரைவாலி அரிசி-பாசி பருப்பு பொங்கல் .. மா இஞ்சி மல்லித்தழை சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பரப்பு!
திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள் : அமைச்சர் சேகர்பாபு
தொகுதி மறுசீரமைப்பு விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், சைந்தவி தம்பதி.. ஓரே காரில் வந்து பரஸ்பர விவாகரத்து மனு தாக்கல்
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள..துணைவேந்தர் பணியிடங்களை நிரப்புக.. டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!
கோயம்பேட்டில் காய்களின் வரத்து அதிகரிப்பு..முருங்கைக்காய் விலை 10 மடங்கு வீழ்ச்சி.. விவசாயிகள் கவலை!
Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... என்ன காரணம் தெரியுமா?
Mumbai Indians.. என்ன கொடுமை சார் இது.. 13 வருஷமா இப்படியே நடந்திட்டிருந்தா எப்படி சார்!
தல, தல தான்... இளம் வீரர்களை மனம் திறந்து பாராட்டும் தோனி... ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து
{{comments.comment}}