- J.லீலாவதி
மாஞ்சோலை அது ஒரு அழகான கிராமம் எங்கும் பச்சை பசேல் என புல்வெளிகள் பறவைகளின் சத்தம் நீரோடைகளின் சத்தம்.
ராமுவும் கீதாவும் அந்த அழகை ரசித்தபடி இருவரும் தங்கள் மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு தங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தனர்.
அன்று முழுவதும் இயற்கையின் அழகு இயற்கை பராமரிப்பு என்பதை பற்றிய பாடம் இருந்தது அன்றைய நாளும் வழக்கம் போல நன்றாக ஓடிவிட்டது.
மாலையில்..

ஏன் கீதா இன்று பாடம் நம் கிராமத்தை பற்றி வர்ணிப்பதாகவே இருந்தது அல்லவா என்றான்.
நான் நினைத்தது அப்படியே கூறி விட்டாயே என்றாள் கீதா. இருவரும் பேசிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தார்கள்.
கீதா அங்க பாரு உங்க வீட்ல நிறைய பேர் நிக்கிற மாதிரி தெரியுது
ஆமாம் அதுதான் எனக்கும் புரியல சரி நான் போய் வருகிறேன் நீ பார்த்து போ நாளை பார்க்கலாம் என்று சொல்லி கீதா தன் வீட்டிற்கு வந்தால் .. கீதாவுடைய அம்மா கீதாவை பார்த்ததும் அழுது கொண்டே ஓடிவந்து கீதாவை கட்டிப்பிடித்து அழுதார்.
ஏம்மா என்ன ஆச்சு ஏன் நம்ம வீட்ல எல்லாரும் நிக்கிறாங்க என்றதும் உங்க அப்பா நம்மள விட்டுட்டு போயிட்டாரு என்று அழுதார்.
கீதாவிற்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது என்னம்மா சொல்ற இப்ப நம்ம என்ன பண்ணுவோம் நமக்குன்னு யாரு இருக்கா எப்ப பாத்தாலும் கடவுளே கடவுளே என்று இருப்பார். எது நடந்தாலும் கடவுள் பார்த்துப் பார் என்பார். இப்ப நம்ம நிலைமையை பாருங்க. எந்த கடவுள் வந்து நம்மள காப்பாத்த போகுது .. அப்பா எங்களை விட்டு போயிட்டீங்களே எங்களுக்கு யார் இருக்கா என்று சத்தமாக அழுதாள்.
என்னங்க நான் தனியா நம்ம பொண்ணை எப்படி கரை சேர்ப்பேன் எனக்கு யாரை தெரியும் இப்படி விட்டுட்டுப் போயிட்டீங்களே. நான் என்ன பண்ணுவேன் வயசு புள்ளைய வச்சிட்டு சாமி சாமின்னு போனீங்களே. இப்ப அந்த சாமி வந்து உங்க புள்ளைக்கு வாழ்க்கை அமைச்சு தருமா என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.
இந்நிலையில் ஒருவர் வந்து ஏமா கீதா இங்க பாரு சொல்றேன்னு கோவப்படாத. உங்க அப்பாவ எரிக்கவா இல்ல புதைக்கவா ஏன்னு கேட்கிறேன் என்றால் உங்கள் கையில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஏன்னா ஏற்கனவே உங்க அப்பா நோய்ல இருந்தவரு ரொம்ப நேரம் வைத்தால் உடம்பு தாங்காது என்றதும், கீதா மெல்ல பேச தொடங்கினாள்.
ஐயா எங்க நிலைமை அந்த மாதிரி இருக்கு எங்களுக்கு எங்க அப்பா தெரியும் எங்க அப்பாவுக்கு பக்கத்து ஊர்ல இருக்க அந்த கோயிலை மட்டும்தான் தெரியும். எங்களுக்கு ஊர் எல்லையில் சிறிய நிலம் இருக்கிறது அல்லவா அதை விற்று எங்க அப்பாவுக்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்ய ஏற்பாடு பண்ணி குடுங்க என்று கூறி அழுதாள்.
அதற்குள் செய்திக் கேள்விப்பட்ட கீதாவுடன் படிக்கும் ரவியும் வந்து சேர்ந்தான். இதற்கிடையில் யாரோ ஒருவர் நம்ம ஊருக்கு புதுசா ஒருவர் வந்து கொண்டிருக்கிறார் அவர் யார் என்று தெரியவில்லை என்று சொல்லி முடிப்பதற்கும் அவர் கீதா வீட்டை நோக்கி வந்தார்.
ஐயா நீங்க யார் எங்கிருந்து வரீங்க
நான் உங்க அப்பாவிற்கு வேண்டியவன் என்றார் அந்த பெரியவர்
உங்கள பத்தி எங்க அப்பா எதுவும் எங்க கிட்ட சொன்னதில்லையே எங்க அப்பாவுக்கு என்ன முறை அப்ப இத்தனை நாளா ஏன் பாக்க வரல இப்ப எதுக்கு வந்திருக்கீங்க என்றாள்
உடனே அந்தப் பெரியவர் அம்மா உங்க அப்பா கிட்ட நான் நிறைய கடன் பட்டிருக்கிறேன் அதை அடைக்கவே வந்திருக்கிறேன் நான் பக்கத்து ஊர் உன் அப்பா அங்கே வரும் போதெல்லாம் என்னை பார்த்துவிட்டு எனக்கு உணவளித்து விட்டு செல்வார்கள் அவரின் கவலையெல்லாம் உங்களை பற்றி தான் சிறிது நாட்களாக அவர் வராததால் இன்று நானே அவரை தேடி வந்தேன் வந்த இடத்தில் உன் அப்பா இறந்திருப்பது அறிந்தேன் என்றார் .
உடனே அங்கிருந்தவர்கள் அம்மா அவர்தான் சொல்றார் இல்ல உங்க அப்பா கூட சொந்தம் என்று அவருக்கும் உங்க அப்பா வயசு தான் இனி ஆக வேண்டிய காரியத்தை பாருங்க என்றார்கள் .
அந்த பெரியவர் எல்லா காரியங்களும் முடியும் வரை பொறுத்து இருந்து கீதாவையும் ரவியையும் ஊர் முன்னிலையில் சேர்த்து வைத்து நீ என்றும் உன் அப்பாவின் இடத்தில் நின்று உனக்கு என்ன என்ன வேண்டுமோ அதை எல்லாம் நான் நிறைவேற்றுவேன் என்று கூறினார்
பிறகு எப்பொழுதெல்லாம் உனக்கு உன் அப்பா ஞாபகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் என்னை அழைத்தால் நான் வருவேன் என்று கூறி நடந்தார்
சிறிது நேரம் அவரை நடக்க விட்டு அவர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பில் ஊர் மக்கள் அவருக்கு தெரியாமல் அவர் பின் தொடர்ந்தனர். அப்போது அந்தப் பெரியவர்,பக்கத்து ஊர் கோவிலுக்குள் நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து உள்ளோ போன மக்கள் அங்கு அவரைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர்.. திகைத்து நின்றனர்.
அப்பொழுதுதான் கீதாவிற்கும் அவள் அம்மாவிற்கும் தன் அப்பா கூறியது நினைவுக்கு வந்தது. இறைவன் இருக்கிறார் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று கூறியதை.. இப்போத அதை இறைவனே நேரில் வந்து உணர்த்தியதை நினைத்து கண்ணீருடன் பெருமையாக நின்றிருந்தனர்.
(J.லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பார் போற்றும் பாரதி!
ஓடி விளையாடு பாப்பா.. அதுவும் இந்த மாதிரி விளையாடு பாப்பா... உடம்புக்கு ரொம்ப நல்லது!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!
{{comments.comment}}