சென்னை: வரலாறு காணாத புதிய உச்சத்திற்கு தங்கம் விலை வந்துள்ளது. சென்னையில் விற்கப்படும் தங்கம் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,440க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தினாலும், இந்த விலை ஏற்றம் முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து நகையை வாங்கி முதலீட்டாளர்கள் சேமித்து வருவதால் தான் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய மக்கள் மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்கள் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவது தான் முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர காரணமாக கூறப்படுகிறது.

சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,805 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.640 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,440 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7424 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59392 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.704 உயர்ந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
தங்கம் மட்டும் உயரவில்லை வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த சனிக்கிழமை இருந்த விலையை விட இன்று ரூ.1.50 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 90 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 720 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து ரூ.90,000த்திற்கு விற்கப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}