சென்னை: தை மாதத்தில் கல்யாணம் வைத்திருக்கும் விசேஷ வீட்டார்களா நீங்கள்.. கவலை வேண்டாம். இன்றும் நகை விலை குறைவு தான். இன்று மட்டும் சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
கடந்த 3ம் தேதியில் இருந்து தொடர்ந்து நகை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து இருந்தது. அது இன்று மீண்டும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு ... என்னய்யா ஆச்சிரயமா இருக்கே. தை மாதத்தில் நகை விலை குறைவாக இருக்கிறதே என்று பலரும் வியக்கும் வண்ணம் உள்ளது.
தை மாதத்தில் முகூர்த்தம் நிறைய இருப்பதால் விசேஷ வீட்டாருக்கு நகை விலை குறைவு என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தை மாதம் என்றால் நகை விலை உயரத்தான் செய்யும் என்பார். அப்படித்தான் அதன் விலையும் ஏற்றம் காணும். ஆனால் இந்த தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5840 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 80 ரூபாய் குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 46720 ரூபாயக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6372 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைவாகும். 8 கிராம் 24 கேரட்டின் விலை ரூ.50,976 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே நீடிக்கிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 76 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 608 உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ. 760 ஆக இருக்கிறது.
நகையில் ஏன் முதலீடு அதிகம்
நாட்டில் பண வீக்கத்திற்கு முக்கிய காரணமாக நகை விலை கருதப்படுகிறது. நகையில் இந்திய மக்கள் அதிகளவில் பயன்படுத்தியும் முதலீடு செய்தும் வருகின்றனர். தங்கத்தில் முதலீடு என்பது பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக கருதி வருகின்றனர். இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனலாம்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு,சர்வதேச அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணத்தினால் தங்கம் விலையில் இறக்கம் காண்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விலை குறைவு பண்டிகையை முன்னிட்டு நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}