அச்சச்சோ.. இன்னிக்கு தங்கம் விலை என்ன தெரியுமா?

Oct 14, 2023,12:27 PM IST

சென்னை: தங்கம், வெள்ளி சந்தையில் விலை ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.


பொதுவாக அக்டோபர் மாதம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை நிலையற்ற நிலையிலேயே உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்த தங்கம் இன்று ரூ. 360 அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தால் அதிகமாக உயர்கிறது. விலை குறைந்தால் அதிகமாகவே குறைகிறது. 




தங்கத்தின் விலை குறைவைக் காட்டிலும் உயர்வு அதிகமாக இருப்பதால், தங்கம் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது எனலாம். இதனால் ஏதாவது நகை வாங்கலாமே என்று நினைப்போர் அயர்ச்சி அடையும் நிலையே உள்ளது. 


தங்கம் விலை இப்படி இருக்கும் காரணத்தினால் தங்கம் வாங்க நினைக்கும் மக்கள் விரைந்து வாங்கி தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்து தப்பிக்கலாம். விட்டால் அடுத்தடுத்து சீசன் வருவதால் விலை மேலும் உயரத்தான் செய்யும்.


இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5555 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 44440 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6060 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 49 ரூபாய் அதிகமாகும். 


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும்  உயர்ந்தே உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்