சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் என்று சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து, சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21ம் தேதியில் இருந்து உயர்ந்து வந்த தங்கம் நேற்று வரை உயர்ந்தே காணப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து இருந்தனர். குறிப்பாக, வைகாசியில் விஷேசங்கள் வைத்திருந்தவர்கள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டனர். இந்நிலையில், இன்று விலை குறைந்துள்ளது சற்று ஆறுதல் அளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விலை குறைவு சிறுது நாட்களுக்கு நீடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,775 ரூபாயாக உள்ளது. நேற்று கிராமிற்கு 35 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.280 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,200 ரூபாயாக இருந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,730 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 45 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.360 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,840 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,342 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,736 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.101க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,02,200 இருந்த விலை இன்று ரூ.1,01,000க்கு விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.1.200 குறைந்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}