அச்சச்சோ.. தங்கம் விலை திடீர்னு விர்ர்.. சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது.. வெள்ளி விலையும் கிடுகிடு!

Jun 15, 2024,11:50 AM IST

சென்னை: நேற்று குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. தங்கம் மட்டும் இல்லை வெள்ளியும் உயர்ந்தே உள்ளது.


கடந்த 2 நாட்களாக சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட தங்கம், அதன்பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த விலை ஏற்ற இறக்கத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ஜூன் மாதம் தொடக்கம் முதலே அதிக ஏற்ற இற்றக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதுவும் கிராமிற்கு ரூ.55 உயர்ந்து, சவரனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது.


குறிப்பாக, அமெரிக்காவில்  வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையும். அங்கு  வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் நிபுணர்கள் கூறி வந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


சென்னையில் இன்றைய தங்கம் விலை




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,705 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 55 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.440 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது. 


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,315 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,520 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 ஆக உள்ளது.கடந்த 2 நட்களாக ரூ.240 குறைந்திருந்த நிலையில், இன்று ரூ.440 அதிகரித்துள்ளது.


இன்றைய வெள்ளி விலை...


தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்தே உள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி 0.60 காசுகள் உயர்ந்து ரூ.95.60 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 764.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை   நேற்று ரூ.95.000 விற்கப்பட்டது இன்று ரூ.95.600 விற்கப்படுகிறது. 

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்