Gold Rate: தங்கம் விலை விர்ர்ர்... என்னாச்சு?... வாடிக்கையாளர்கள் கலக்கம்!

Oct 10, 2023,12:12 PM IST

சென்னை: இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது.  இன்று கிராமிற்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5380க்கு விற்பனையாகிறது. 


தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சுப காரியங்கள் ஏதும் நடக்காமல் உள்ளது. புரட்டாசி மாதமும், மகாளய பட்ச காலமும் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கு பிறகு திருமண முகூர்த்தம் ஆரம்பமாகி விடும். 




ஐப்பசி மாதத்தில் திருமணம் வைத்திருப்பவர்கள் அமாவாசையில் தங்கம் வாங்கலாம், புரட்டாசி மாதத்தில் விலை குறையும் வாங்கலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால் புரட்டாசி மாதம் முடிவடைவதற்கு முன்பே தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதால், தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் இதுதான். 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5380 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 43040 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 5869 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 16 ரூபாய் அதிகமாகும். 


தங்கம் விலை சற்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.72.60 காசாக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 580.80 காசாக உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. அதிமுக அதிரடி வேகம்.. விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

news

முதல்வர் விஜய் பேசியதில் தவறில்லை : சபாயநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்

news

எது மக்களாட்சி?

news

தாத்தா பாட்டி வந்திருக்கா.. டூப் விட்ட அண்ணன்.. ஸ்கூல் அனுபவங்கள் (2)

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

அதிகம் பார்க்கும் செய்திகள்