சென்னை: தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.160 இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சனியன்று சவரனுக்கு ரூ.1520 குறைந்திருந்த நிலையில், இன்றும் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைகாசியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும் மாதம் என்பதால் நகை விலை குறைந்துள்ளது விஷேசங்கள் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களாகவே நகை விலை ஏற்ற இறக்கங்கள் அதிகம் காணப்பட்டு வருகிறது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காரணமாகவே தங்கம் விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மேலும், இந்தியா மட்டும் இன்றி, தற்போது வெளி நாடுகளில் வாழும் மக்களும் அதிகப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யும் நிலை அதிகரித்து வருவதினால் தான் நகை விலை ஏற்ற இறக்கம் கண்டு வருவதாக வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,630 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,040 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,233 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,864 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது.
சென்னையில் வெள்ளி விலை
கடந்த சனிக்கிழமையன்று அதிரடியாக குறைந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை 0.20 காசுகள் குறைந்து ரூ.96.20 க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 769.60 ஆக உள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளியின் விலைரூ.96,000 இருந்த விலை இன்று ரூ.96,200க்கு விற்கப்படுகிறது.
எந்த மலரும் சொல்லிக் கொள்வதில்லை!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு
முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை
{{comments.comment}}