சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், "தமிழக வெற்றிக் கழகம்" மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அதன் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து ஒரு புதிய சகாப்தத்தை அவர் தொடங்கி வைத்திருப்பது உலக அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் விஜய் காட்டும் முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அரசியலில் பொதுவாகவே "வென்றவர்-தோற்றவர்", "எதிர் கட்சி என்றாலே எதிரி கட்சி" என்ற பகைமை உணர்வு மேலோங்கி இருக்கும் சூழலில், முதலமைச்சர் விஜய் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தைத் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற கையோடு, அவர் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களை நேரில் சென்று சந்தித்து வருவது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
அதுவும் யாரை எதிர்த்து படு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டாரோ அந்தத் தலைவர்களை அவர் நேரில் போய்ப் பார்க்க ஆரம்பித்திருப்பது தேசிய அளவில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
தலைவர்களைச் சந்தித்த தருணங்கள் :
முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை முதலில் இன்று நேரில் போய் அவரது இல்லத்தில் சந்தித்தார். விஜய் வருகையைத் தொடர்ந்து அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வீட்டின் வாசலில் வந்து விஜய்யை அழைத்துச் சென்றார்.

வீட்டுக்குள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் விஜய்யை கட்டி அணைத்து வரவேற்றார். இருவரும் மகிழ்ச்சியுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். வழக்கமாக தலைவர்கள் வருகையின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா உடன் இருப்பார். ஆனால் இன்று அவர் இல்லை.
இதையடுத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டுக்குப் போய் சந்தித்தார் விஜய். இது கிட்டத்தட்ட Fabboy Moment போல ஆகி விட்டது. வைகோவை இத்தனை உற்சாகமாக சமீப காலத்தில் யாருமே பார்த்தது இல்லை. அப்படி ஒரு உற்சாகம் மனிதரிடம், படு ஜாலியாக, மிக மிக மகிழ்ச்சியாக ஒரு கொண்டாட்ட மனோபாவத்துடன் விஜய்யை அவர் வரவேற்றுப் பேசினார். அவரது வீட்டிலேயே ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் உள்ளனர் போல. பேரன் விஜய் போடும் அதே காஸ்ட்யூமில் இருந்தார். பணிப் பெண்களோ, விஜய்யைப் பார்த்து ஓடி வந்து திருஷ்டி சுற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று பெரியார் திடலுக்குச் சென்ற விஜய், அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அரசின் மீதும், மு.க.ஸ்டாலின் மீது பல்வேறு விமர்சனங்களை விஜய் முன் வைத்திருந்தாலும், முதல்வராக பதவியேற்றதும் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது இதுவரை பல வருடங்களாக அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கும் கூட இல்லாத ஒரு முதிர்ச்சியை காட்டுகிறது. இது பொது மக்களை மட்டுமல்ல, எதிர்ப்பு உணர்வுடைய அரசியல் கட்சி தலைவர்களையும் நெகிழ வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இதெல்லாம் இதுவரை கனவில் கூட நடந்தது இல்லை என்பதால் மக்களுக்கு விஜய் மிகப் பெரிய உயரத்தில் காட்சி தருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இது ஏன் ஒரு அரிய நிகழ்வு?

தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, பழைய திட்டங்களை முடக்குவதும், முந்தைய ஆளுமைகளை விமர்சிப்பதும் தான் வாடிக்கை. ஆனால், "அரசியல் என்பது பகைமை அல்ல, அது சேவைக்கான போட்டி" என்பதை விஜய் தனது செயலால் நிரூபித்துள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களையும், மாற்றுக் கருத்துள்ளவர்களையும் கண்ணியத்துடன் நடத்துவது விஜய்யின் "புதிய அரசியல்" பாணியைப் பறைசாற்றுகிறது.
ஒரு புதிய நிர்வாகியாக, மூத்தவர்களின் அனுபவத்தைப் பெறுவதில் அவர் காட்டும் ஆர்வம் நிர்வாகத் திறமைக்கு வலு சேர்க்கும்.இந்தச் சந்திப்புகள் தொண்டர்களிடையே நிலவும் கசப்புணர்வைப் போக்கி, ஒரு இணக்கமான சூழலை மாநிலத்தில் உருவாக்கியுள்ளது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கொள்கையோடு களம் கண்டுள்ள முதலமைச்சர் விஜய், வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், தனது அடக்கமான செயல்களால் தமிழக மக்களின் இதயங்களை வென்று வருகிறார். தமிழக அரசியலில் இது ஒரு ஆரோக்கியமான தொடக்கம். இந்த 'கண்ணியமான அரசியல்' கலாச்சாரம் தொடர்ந்தால், தமிழகம் நிர்வாக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு உன்னத நிலையை எட்டும் என்பதில் ஐயமில்லை.
மூத்த தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்.. தமிழகத்தில் உருவாகும் புதிய அரசியல் டிரெண்ட்
JCD Prabhakar: தமிழகத்தின் புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் தேர்வு.. துணை சபாநாயகரானார் விஜய் சங்கர்
தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டசபை கூடியது.. உளமார உறுதிமொழி எடுத்த முதல்வர் விஜய்
N Anand: புஸ்ஸி ஆனந்த்.. இதுவரை வென்றது 2 முறை.. இரண்டு முறையும் வென்றது யாரைத் தெரியுமா?
'உளமாற உறுதி ஏற்கிறேன்' இந்த சொல்லின் வரலாறு தெரியுமா?
சிந்தனைச் சிதறல்.. ஆணவம் அறிய விடாமல் நம்மைக் கெடுக்கும்
Proverb: தாயைப் பார்த்து பெண்ணை கொள், பாலை பார்த்து பசுவைக் கொள்!
ஆசையில பாத்திகட்டி!
நிதானம்
{{comments.comment}}