சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.53,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.96.20க்கு விற்கப்படுகிறது.
கடந்த மாதம் புதிய உச்சம் தொட்ட தங்கம், ஜூன் மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் எல்லாம் தமிழகத்தில் உள்ள மக்கள் தான் நகை மீது மிகுந்த ஆர்வம் கொண்டு வாங்கி வந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் இந்தியர்கள் மட்டும் இன்றி உலகளவில் உள்ள மக்கள் தங்க நகைகளை வாங்கி சேமித்து வருகின்றனர். இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது நகையின் விலை தான்.
நாளுக்கு நாள் நகை விலை அதிகம் ஏற்றம் கண்டு வருவதும், நாட்டில் பொருளாதாரம் சீர் கெட்டு இருப்பதும் நகையில் மக்கள் முதலீடு செய்ய முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,645 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 15 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.120 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,160 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,249 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.57,992 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 ஆக உள்ளது.
இன்றைய வெள்ளி விலை...
நேற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று சரிந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1.20 காசுகள் உயர்ந்து ரூ.95 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 760 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று ரூ.96,200 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.95,000 விற்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின்.. முதல்வர் பெயரை பயன்படுத்த தடையில்லை.. சி.வி. சண்முகத்திற்கும் Fine!
அன்புமணி அறிவித்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் வழக்கு
ஆகஸ்ட் 9ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சிறப்பு எஸ்.ஐ., கொலை... எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை கண்டனம்!
ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி
உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு
ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?
தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?
ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?
{{comments.comment}}