தாறுமாறாக உயர்ந்து வரும் தங்கம் விலை.. கடைப் பக்கம் போகவே பயமா இருக்கேப்பா!

Oct 23, 2024,11:10 AM IST

சென்னை: தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ஒரு சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன்  ரூ.58,720க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.112க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இன்று தங்கம் விலை சவரன் ரூ.59,000த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி சொல்வது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்ததை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயர்விற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம், வல்லரசு நாடுகளில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை மற்றும் உலக நாடுகளின் நாணயக் கொள்கைகள், ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்த வட்டி குறைப்பு உள்ளிட்ட காரணங்களினால் தான் தங்கம் விலை தற்போது தாறுமாறாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.


இப்படியே போன நகை வாங்குவதை பற்றி யோசிக்கவே முடியாது போல. நகை  விலை தான் ஏறுதுனு வெள்ளி விலையை பார்த்தால் அதுவும் குண்டக்க மண்டக்க ஏறுது... என்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் தற்போது அதிகளவில் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அது மட்டும் இன்றி ஐப்பசியில் திருமணம் வைத்திருப்பவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.7,340க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.8,007க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.73,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,34,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,007 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,056 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.80,070 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,00,700க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,022க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,007க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,012க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்து அக்டோபர் 17ம் தேதி வரை வெள்ளி விலை பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதன்பின்னர் அக்டோபர் 18ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயரத்தொடங்கியது வெள்ளி விலை. அதுவும் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.112 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 896 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,120 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,200 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்