காங்டாக் : அரசு ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மகப்பேறு கால விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும் என சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் உடனான வருடாந்திர ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரேம் சிங், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 12 மாதம் மகப்பேறு விடுமுறையும், ஒரு மாதம் பெற்றோர் பராமரிப்பு விடுமுறையும் வழங்கப்படும். பலன்களின் அடிப்படையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.
இதனால் அரசு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தையும், பிள்ளைகளையும் இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும். இது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மகப்பேறு பலன் சட்டம் 1961 ன் படி வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 6 மாதம் அல்லது 26 வாரங்கள் சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிக குறைந்த அளவாக 6.32 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருக்கும் சிக்கிமில் முதல் முறையாக பெண்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
{{comments.comment}}