"தி"னமும். . "மு"ழு உடல் நலத்துடன்.. "க"டமையாற்ற .. ஸ்டாலினுக்கு தமிழிசை.. சூப்பர் வாழ்த்து!

Mar 01, 2023,09:46 AM IST
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டுள்ளனர். இதில் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தனது பாணியில் சூப்பராக வாழ்த்தியுள்ளார்.



சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு குறித்து சற்று விமர்சனம் செய்து வந்தார் தமிழிசை செளந்தரராஜன். தனது பாணியில் குத்திக் காட்டிப் பேசி வந்த அவரது விமர்சனங்கள் சலசலப்புகளையும் ஏற்படுத்தின.

குறிப்பாக தமிழ்நாடு சர்ச்சை வந்தபோது, முதல்வர் ஸ்டாலின் என்ற பெயர் கூட தமிழ்ப் பெயர் இல்லைதான். இதற்காக அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாகி விடுமா என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி பூடகமாக தமிழ்நாடு அரசையும், ஸ்டாலினையும் சாடி வந்தாலும் கூட தனது அரசியல் நாகரீத்திலிருந்து வழுவாமல் இருந்து வந்தார் தமிழிசை.



இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தனது பாணியில் சூப்பராக வாழ்த்தியுள்ளார் தமிழிசை.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்:

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்... 

மக்களுக்கு
"தி"னமும் 
"மு"ழு உடல் நலத்துடன்
""டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.... என்று பலே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.

தமிழிசை யார், குமரி அனந்தன் மகளாச்சே.. தமிழருவியாகத்தானே இருப்பார்!

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்