காதலனுக்கு விஷம்.. மரண தண்டனையை எதிர்த்து.. கேரள ஹைகோர்ட்டில் கிரீஷ்மா மேல்முறையீடு!

Feb 06, 2025,05:05 PM IST

திருவனந்தபுரம்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு கேரள அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். 23 வயதான இவர் நெய்யூர் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய க்ரீஷ்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் மலர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஷாரோன்ராஜூக்கு திடீர் என உடல்நலக் குறைவு எற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 11 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் இறந்தார்.




ஷாரோன் ராஜ் இறப்பில் சந்தேகம் ஏற்றபட்ட நிலையில், ஷாரோன் ராஜ் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து ஷாரோன் ராஜ் காதலி மீதும் சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் பெற்றோர் தெரிவித்திருந்தனர். அதன்பின்னர் காதலி க்ரீஷ்மாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ஷாரோன் ராஜூற்கு காதலி க்ரீஷ்மா விஷம் கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. காதலன் ஷாரோன் ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த வழக்கில் க்ரீஷ்மா, அவரது தாய் மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெய்யாற்றின் கரை கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்த நிலையில்,  ஷாரோன்ராஜ் காதலி க்ரீஷ்மாவிற்கு மரண தண்டைன விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அத்துடன் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் மாமன் நிர்மல்குமாருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தது. 


தற்போது க்ரீஷ்மாவும், அவரது மாமாவும் தண்டனையை எதிர்த்து கேரளா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் பி.பி. சுரேஷ்குமார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் ஆகியோர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற க்ரீஷ்மாவின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு கேரள அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்