டெல்லி: நவராத்திரி பண்டிகை தொடங்கும் முதல் நாளா இன்று முதல் சுGST வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
சுமார் 375 பொருட்களுக்கான விலைகள் இன்று முதல் குறைகின்றன. சமையலறை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் குறைய உள்ளது. இந்த GST குறைப்பால் நுகர்வு அதிகரிக்கும். விற்பனையும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நவராத்திரி பண்டிகை காலத்தில் இது விற்பனைக்கு ஊக்கமளிக்கும். குறிப்பாக ஆன்லைன் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதுகுறித்து நேற்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது இதை GST சேமிப்பு திருவிழா என்றும், தற்சார்பு இந்தியாவுக்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பம் என்றும் குறிப்பிட்டார்.

செப்டம்பர் 4 அன்று நடந்த GST கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி குறைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய வரி விதிப்பின்படி, பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 மற்றும் 18 சதவீதம் வரி விதிக்கப்படும். அதே நேரத்தில் ஆடம்பர பொருட்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படும். புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு 28 சதவீதம் வரி மற்றும் கூடுதல் செஸ் விதிக்கப்படும்.
இதுவரை GST நான்கு அடுக்குகளாக இருந்தது. அதாவது 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என வரி விதிக்கப்பட்டது. இதோடு ஆடம்பர பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் செஸ் வரியும் விதிக்கப்பட்டது.
புதிய வரி விதிமுறையின் கீழ், தினசரி பயன்பாட்டு பொருட்கள் மற்றும் அதிக அளவில் விற்பனையாகும் பொருட்களான நெய், பன்னீர், வெண்ணெய், 'நம்கீன்', கெட்சப், ஜாம், உலர் பழங்கள், காபி மற்றும் ஐஸ்கிரீம் போன்றவையும், டிவி, ஏசி மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விலையும் குறையும்.
பல முன்னணி FMCG (Fast-Moving Consumer Goods) நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளை குறைத்துவிட்டன. GST குறைப்பின் பலன்களை நுகர்வோருக்கு வழங்குகின்றன. சோப்பு, ஷாம்பு, குழந்தைகளுக்கான டயபர், பற்பசை, ரேஸர் மற்றும் ஆஃப்டர் ஷேவ் லோஷன் உள்ளிட்ட பல பொருட்களின் புதிய விலைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
டாபர், ITC, Procter & Gamble, Emami, Nestle, RCPL, Amul மற்றும் HUL போன்ற முன்னணி FMCG நிறுவனங்கள் புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த புதிய விலைப்பட்டியலை தங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோருக்கு அந்தந்த வலைத்தளங்கள் அல்லது உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் மூலம் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு நிறுவனமான டாபர், 1 லிட்டர் ரியல் ஜூஸ் பாட்டிலின் விலையை ரூ.130 லிருந்து ரூ.122 ஆகவும், 900 கிராம் Chyawanprakash விலையை ரூ.475 லிருந்து ரூ.440 ஆகவும் குறைத்துள்ளது. டாபர் ரெட் மற்றும் மெஸ்வாக் பற்பசையின் (200 கிராம்) விலையையும் ரூ.153 லிருந்து ரூ.135 ஆக குறைத்துள்ளது. அதேபோல், ஜீரண மாத்திரையான ஹஜ்மோலாவின் (120 மாத்திரை) விலையும் ரூ.70 லிருந்து ரூ.65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்ஸின் அளவை 500 கிராமிலிருந்து 600 கிராமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விலையை ரூ.120 லிருந்து ரூ.116 ஆக குறைத்துள்ளது. அதேபோல், நெஸ்காஃபே கிளாசிக் (45 கிராம்) விலையை ரூ.235 ஆகவும், நெஸ்காஃபே கோல்டு விலையை ரூ.755 ஆகவும் குறைத்துள்ளது. ITC நிறுவனம் Savlon (100 ml) விலையை ரூ.400 லிருந்து ரூ.374 ஆக குறைத்துள்ளது. மேலும், பசு நெய் (1 லிட்டர்) விலையை ரூ.1,080 லிருந்து ரூ.1,010 ஆகவும், சன்ஃபீஸ்ட் மேரி லைட் (956 கிராம் பேக்) விலையை ரூ.170 லிருந்து ரூ.150 ஆகவும் குறைத்துள்ளது.
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!
2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!
குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்
2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!
Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!
அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி
அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!
{{comments.comment}}