குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 : மேஷ ராசிக்காரர்களே.. பட்ட கஷ்டமெல்லாம் பறக்கப் போகுது!

Mar 22, 2024,12:10 PM IST

சென்னை : 2024 ம் ஆண்டு மே மாதம் 01 ம் தேதி குருப்பெயர்ச்சி நடக்கிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார்.  இந்த குருப்பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட போகிறது. 


குருப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு என்னென்ன பலன்கள் பலன்கள் ஏற்பட போகிறது என்பதை பார்க்கலாம்.




மேஷ ராசிக்கு நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியில் குரு பகவான் ஜென்ம ஸ்தானத்தில் இருந்து 2ம் ஸ்தானத்திற்கு செல்கிறார். மேஷ ராசிக்கு 9, 12 ஆகிய பாவங்களுக்கு உரியவர் குரு பகவான். 9ம் பாவம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குறிக்கக் கூடியதாகும். 12ம் பாவம் என்பது சயன, அயன, சுக ஸ்தானத்தை குறிக்கக் கூடியதாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கிய கிரகமாக குரு இருக்கிறார். அவர்கள் முன்னேற்றம் அடைவதற்கும், தொழிலில் சிறந்து விளங்குவதற்கும் முக்கியமான காரண கர்த்தாவாக குரு பகவான் இருக்கிறார்.  இதனால் உயர்வான இடத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்கள். அனைவரிடமும் சுமூக உறவையும், நல்ல அணுகுமுறையையும் கொண்டவர்களாக மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்கள். அதே போல் கெளரவத்திற்காக அதிகம் செலவு செய்யக் கூடியவர்களாகவும் மேஷ ராசிக்காரர்கள் இருப்பார்கள்.


இதுவரை குரு பகவான் மேஷ ராசிக்கு ஜென்ம ராசியில் இருந்து வந்தால், ஜென்மத்தில் குரு இருந்தால் வனவாசம் என்பார்கள். வீண் உழைப்பு, உடல் உபாதைகள் அதிகம் ஏற்படுவது, சிலருக்கு வருமானங்கள் குறைவது, எந்த விஷயத்தை எடுத்தாலும் கால தாமதம் ஆகிக் கொண்டே செல்வது ஆகியவை கடந்த ஒரு வருடமாகவே மேஷ ராசிக்காரர்கள் சந்தித்து வந்தார்கள். 


மே மாதத்தில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு பல மாற்றங்கள், திருப்பங்கள் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏற்பட போகிறது. குரு பகவான் தற்போது ஜென்ம ஸ்தானத்தில் இருந்து பெயர்ச்சி அடைந்து 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு வருகிறார். இங்கு இருக்கக் கூடிய குரு பகவான் பல அபரிமிதமான நன்மைகளை தரப் போகிறார். 11ல் சனி, 2ல் குரு என்ற நிலை ஏற்பட போவதால் இரண்டு வகையான வளர்ச்சி ஏற்பட போகிறது. அதனால் குருப்பெயர்ச்சியால் அதிக நன்மை அடையக் கூடிய ராசியாக மேஷ ராசி உள்ளது. 


2ம் இடத்திற்கு வரவிருக்கும் குரு, புதிய தன வரவுகளை ஏற்படுத்துவார். புதிய முயற்சிகளால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகமாக நடைபெறுவதற்கும், சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதற்கும் வாய்ப்புள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உங்கள் வார்த்தைக்கு சமூகத்தில் நல்ல மரியாதை இருக்கும். உத்தியாகத்தில் உயர்வான நிலையை எட்டுவதற்கும் வாய்ப்பு உருவாகும். நீண்ட நாட்களாக சம்பள உயர்வு, ப்ரொமோஷன் கிடைக்கவில்லை என காத்திருப்பவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலனை பெற்றத் தரும். மேலதிகாரிகள், உடன் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்குவதற்கான வாய்ப்பு தேடி வருகிறது.


ஆன்மிக பயணம், இன்ப சுற்றுலாக்கள் செல்வதற்கு இதுவரை இருந்த தடைகள் விலகி, அதற்கான நல்ல வாய்ப்பு அமையும். நல்ல குரு அமைவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் செய்த முதலீடுகள் மூலம் லாபம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. வீண் செலவுகள் படிப்படியாகக் குறையும். காரிய முடக்கங்கள் நிவர்த்தி ஆகும். 


மேஷ ராசிக்கு 8ம் பாவத்தை குரு பகவான் 7ம் பார்வையாக பார்க்கிறார். இதனால் மனக் கஷ்டங்கள் நீங்கும். சுப காரிய தடை, மன சேர்வு நீங்கும். அதே போல் குரு பகவானின் 5ம் பார்வை 6ம் பாவத்தில் விழுகிறது. இதனால் கடன்கள் அடையும். வியாபாரம், முதலீடு போன்றவற்றிற்கு எதிர்பார்த்த பணம் கிடைக்கும். 9 ம் பார்வையாக 10ம் பாவத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில் நஷ்டங்கள் மாறும். தாய், தந்தைக்கு ஏற்படக் கூடிய நோய் பிரச்சனைகள் நீங்கும். அனாவசிய செலவுகள் குறையும். ஜீவன ஸ்தானம் வலிமை அடையும்.


பரிகாரம் :


மேஷ ராசிக்காரர்கள் குருப்பெயர்ச்சியால் கூடுதல் பலன்களை பெறுவதற்கு பார்வதி தேவி, துர்கா பரமேஸ்வரி போன்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.  பெளர்ணமி, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அம்பிகையை வழிபடுவது மேஷ ராசிக்கு பரிபூரணமான வளர்ச்சி ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்