சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் வரும் அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் குச்சி குச்சி ராக்கமா என்று தொடங்கும் பாடலை குழந்தை குரலில் பாடியவர். இவர் 2006ம் ஆண்டு வெளியான வெயில் திரடப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதன் காரணமாக பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தார்.
இந்த நிலையில், தனது பள்ளி கால காதலியான சைந்தவியை தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் 2013ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் சமீபத்தில் பிரிவதாக தெரிவித்தனர். அத்துடன் இருவரும் ஓரே காரில் வந்து சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று நடந்த விசாரணையில் நீதிமன்றத்தில் இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது நீதிபதி செல்வ சுந்தரி முன்பு குழந்தையை சைந்தவி கவனித்து கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரிய வழக்கில் தீர்ப்பு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்தது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}